ராமநாதபுரம் மாவட்ட அமைச்சர் மணிகண்டனிம் பதவி பறிக்கப்பட்டதால் அந்த அமைச்சர் பதவியை தனக்கு கொடுக்க வேண்டும் என ராஜன் செல்லப்பா தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. 

அண்ணன் எப்போது எழுந்திருப்பான், திண்ணை எப்போது காலியாகும் என்கிற கதையாக இருக்கிறது ராஜன் செல்லப்பாவின் நிலைமை. மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராஜன் செல்லப்பா. அதிமுகவின் சீனியர். ஜெயலலிதா இருக்கும்போதே, தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என ஆர்வமாக காத்திருந்தார். ஏமாற்றமே மிஞ்சியது. இடையில் வந்த எடப்பாடி பழனிசாமியாவது பதவி கொடுப்பார் எனக் காத்திருந்தார். மீண்டும் ஏமாற்றமே நிலவியது. 

இதையும் படிங்க:- மு.க.ஸ்டாலினிடம் சீட்டு வாங்கி எம்.பி.,யாகி பாஜகவின் சங்கியாகி விட்ட வைகோ... பொளேர் குற்றச்சாட்டு..!

இதனால் ஏற்பட்ட விரக்தியால் டி.டி.வி.தினகரன் அணிக்கு அவர் மாறுவார் என கூறப்பட்டது. அடுத்து ஒற்றைத் தலைமை அஸ்திரத்தை ஏவிப்பார்த்தார். எடப்பாடி அசையவே இல்லை. இதற்கு மதுரை பகுதியை சேர்ந்த அமைச்சர்களான செல்லூர் ராஜுவும், ஆர்.பி. உதயகுமாரும் தான் காரணம் என புலம்பியபடியே இருந்து வருகிறார். 

தற்போது மணிகண்டனின் அமைச்சர் பதவி பதவி பறி போனதால், மீண்டும் தனக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என்று ராஜன் செல்லப்பா தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளாராம். ஏற்கனவே பாலகிருஷ்ண ரெட்டியின் அமைச்சர் பதவி போனபோதே அதை பெற தீவிரம் காட்டி வந்தார். கிடைக்கவில்லை.

 

இதையும் படிங்க:- ’உங்க சங்காத்தமே வேண்டாம்...’ இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு..!

இப்போது தென்மாவட்ட அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால், தனக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும் எனக் கேட்டு வருகிறாராம். ஆனால், மணிகண்டன் வகித்த துறையை தனது அரசியல் எதிரியான அமைச்சர் உதயகுமாரிடம் கொடுத்து விட்டார்கள். அதை தனக்கு கொடுக்க வேண்டும் என தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறாராம் ராஜன் செல்லப்பா. தராதபட்சத்தில் மீண்டும் பரபரப்பாக எதையாவது பேசி குட்டையை குழப்பவும் தயாராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றனர்.