raja talks about stalin

தந்தை அளவிற்கு, ஸ்டாலின் தெளிவில்லாதவர். எதையும், படிப்பதில்லை, தெரிந்து கொள்வதில்லை, அறிவின்மையின் உச்சம் ஸ்டாலின் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பேட்டியளியத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கையில், விழா ஒன்றில் பேசிய ஹெச். ராஜா, திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்தார். அரசியல் சூழ்நிலையில் தந்தை அளவிற்கு சுதாரிப்பில்லாதவர் ஸ்டாலின் என்று கூறிய அவர், ஸ்டாலின் கட்டத்தை சோதித்துப் பார்த்ததில் அவருக்கு எந்த காலத்திலும் முதல்வராகும் யோகம் இல்லை என்று தெரிய வருகிறது.

அதையும் மீறி முதல்வர் ஆனால், நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் கூத்தாடி போட்டுடைத்தாண்டி என்கிற கதைபோல் ஆகும் என்று தெரிவித்தார்.

இன்றிருக்கும் தலைவர்களில் ஸ்டாலின் எதையும், படிப்பதில்லை, தெரிந்துகொள்வதில்லை. ஜி.எஸ்.டி. வரி பற்றி எதையும் தெரிந்து கொள்ளாமல் பேசுகிறார். எதையும் படிப்பதில்லை, தெரிந்துகொள்வதில்லை, அறிவின்மையின் உச்சமாக ஸ்டாலின் இருக்கிறார் என்றார்.

ஹெச். ராஜாவின் இந்த கருத்து திமுகவினரை சூடேற்றி உள்ளது.