Asianet News TamilAsianet News Tamil

Women Marriage Age 18: சொன்னதை செய்து காட்டிய பிரதமர் மோடி.. பெண்களுக்கான திருமண வயது இனி 18 கிடையாது..!

கடந்த சுதந்திர தின விழாவின்போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்த நாட்டின் மகள்கள், சகோதரிகளின் நலன் குறித்து இந்த அரசு எப்போதுமே அக்கறை காட்டி வருகிறது. நமது மகள்களை ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து காக்க, அவர்களுக்கு சரியான வயதில் திருமணம் செய்ய வேண்டியது அவசியம். எனவே பெண்களின் திருமண வயதை 18 என்பதிலிருந்து 21ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

Raise minimum age of marriage for women from 18 to 21...Union Cabinet
Author
Delhi, First Published Dec 16, 2021, 11:49 AM IST

பெண்களின் திருமண வயதை 18 வயதிலிருந்து 21ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த சுதந்திர தின விழாவின்போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்த நாட்டின் மகள்கள், சகோதரிகளின் நலன் குறித்து இந்த அரசு எப்போதுமே அக்கறை காட்டி வருகிறது. நமது மகள்களை ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து காக்க, அவர்களுக்கு சரியான வயதில் திருமணம் செய்ய வேண்டியது அவசியம். எனவே பெண்களின் திருமண வயதை 18 என்பதிலிருந்து 21ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

Raise minimum age of marriage for women from 18 to 21...Union Cabinet

முன்னதாக, பெண்ணின் திருமண வயதை அதிகரிக்க நிதி ஆயோக் செயற்குழுவை அமைத்திருந்தது. அதற்கு ஜெயா ஜேட்லி தலைமை வகிக்கிறார். நிதி ஆயோக் நிபுணர் மருத்துவர் வி.கே.பால், சுகாதார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்த செயற்குழுவில் இடம்பெற்றிருந்தனர். 

Raise minimum age of marriage for women from 18 to 21...Union Cabinet

அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படியே பிரதமரும் பெண்ணின் திருமண வயதினை உயர்த்துவது தொடர்பாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில், பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்தும் யோசனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இனி இது நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் பெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Raise minimum age of marriage for women from 18 to 21...Union Cabinet

இதற்கான பரிர்ந்துரையை டிசம்பர் தொடக்கத்தில் செயற்குழு சமர்ப்பித்ததாகத் தெரிகிறது. அதில், பெண்ணின் திருமண வயதை அதிகரிப்பதால் அவளின் பொருளாதார, சமூக, ஆரோக்கிய மேம்பாடு உறுதி செய்யப்படும் அது குடும்பம், சமூகம், குழந்தைகள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் பிரசவத்தின்போது இறக்கும் பெண்களின் விகிதமும் உயர்ந்தபடியே உள்ளது. இதனால் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios