Asianet News TamilAsianet News Tamil

அட ஆண்டவா.. அடுத்த 2 நட்களுக்கு மழை அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்.

அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு முன் அறிவிப்பு:  மழை அதிகரிக்கக்கூடும், சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

Rain will increase for the next 2 days .. Meteorological Center  information.
Author
Chennai, First Published Nov 20, 2021, 3:31 PM IST

அடுத்த 2 நட்களுக்கு மழை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. இது குறித்து அம்மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு : - உள் கர்நாடக மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 20-11-2021 திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், டெல்டா மாவட்டங்களில் வட தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் 21-11-2021 சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain will increase for the next 2 days .. Meteorological Center  information.

22-11-2021 நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்ட,  டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 23-11-2021, 24-11-2021 தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Rain will increase for the next 2 days .. Meteorological Center  information.

அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு முன் அறிவிப்பு:  மழை அதிகரிக்கக்கூடும், சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios