Asianet News TamilAsianet News Tamil

கர்நாடக முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா!! டுவீட் போட்டுட்டு செம கூலாக இருக்கும் ராகுல்

rahul tweet about karnataka political crisis
rahul tweet about karnataka political crisis
Author
First Published May 17, 2018, 12:11 PM IST


கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால் தொங்கு சட்டசபை அமைந்தது. ஆனால் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

காங்கிரஸ் - மஜத கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியபோதும், எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை நாடியது. நள்ளிரவில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது என கூறியதை அடுத்து, இன்று காலை கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா. பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார் ஆளுநர் வஜுபாய் வாலா.

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று காலை பதவியேற்றார். ஆளுநர் வஜூபாய் வாலா அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். 

இந்நிலையில், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாதபோதும் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றிருப்பது குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாதபோதும் பாஜக கர்நாடகாவில் ஆட்சியமைத்திருப்பது, அரசியலமைப்பையே கேலிக்கூத்தாக்கிவிட்டது. வெற்று வெற்றியை பாஜகவினர் கொண்டாடுகின்றனர். ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டதை நினைத்து இந்தியா வருந்தும் என ராகுல் பதிவிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">The BJP’s irrational insistence that it will form a Govt. in Karnataka, even though it clearly doesn’t have the numbers, is to make a mockery of our Constitution. <br><br>This morning, while the BJP celebrates its hollow victory, India will mourn the defeat of democracy.</p>&mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/996951947885228032?ref_src=twsrc%5Etfw">May 17, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

கடந்த ஓராண்டில் நடந்த தேர்தல்களில் பஞ்சாப்பை தவிர வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரஸால் ஆட்சியமைக்க முடியவில்லை. உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், இமாச்சல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜக தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ ஆட்சியமைத்துவிட்டது. இந்நிலையில், கர்நாடகாவிலும் ஆட்சியை இழந்துள்ளது காங்கிரஸ் கட்சி. தொடர் தோல்விகளை சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தனது ஆதங்கத்தை டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு தோல்வியின் போதும் கட்சியை வலுப்படுத்தி அடுத்த முறை வெற்றியை பறிக்க முனைய வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் தொடர்ந்து தவறிவருகிறது காங்கிரஸ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios