அதிமுகவை தாய் கட்சியாக கொண்ட சு.திருநாவுக்கரசு, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்றதுமே, திமுகவுக்கு ஆரம்பித்தது தலைவலி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காவிரி பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டம். முதல்மைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை. உள்ளாட்சி தேர்தல். உள்ளிட்ட பல விஷயங்களில் திமுகவுக்கு நேர் எதிரான கருத்துக்களை அள்ளி தெறித்து வந்தார் திருநாவுக்கரசு.

இதனால், கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டது திமுக தலைமை. காட்டத்தில் இருந்த கருணாநிதியை, திருநாவுக்கரசு சந்தித்தபோதும், ஸ்டாலினை சந்தித்தபோதும், தங்களது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர். 

திருநாவுக்கரசுவின், இந்த அதிரடி நடவடிக்கைகளால் வெறுத்துபோய் இருந்த திமுகவுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நிலை குறித்த விவகாரங்கள் தான்.

கருணாநிதியின் கருத்துக்களுக்கு, நேர் எதிர் கருத்துக்களை கூறியதோடு மட்ட்டுமல்லாமல், ராகுல்காந்தியையும் திருநாவுக்கரசர் அழத்து வந்து ஜெயலலிதாவை பார்க்க வைத்தார் என்ற கடுப்பும் திமுகவுக்கு உள்ளது.

எப்போதுமே திமுகவுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்காதவர்தான் ராகுல்காந்தி, அவரது எண்ணத்துக்கு வலு சேர்க்கும் வகையில், தற்போது தலைவராகி உள்ள திருநாவுக்கரசுவும், செயல்பட்டு வருவதால், காங்கிரஸ் – திமுக கூட்டணி கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை திடீரென திருநவுக்கரசுவுக்கு ராகுலிடம் இருந்துஅழைப்பு வந்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல்காந்தியை , திருநாவுக்கரசு சென்று சந்தித்தார்.

சந்திப்பின்போது, திமுக உடன் கூட்டணி குறித்தும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது குறத்தும் விரிவாக பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசு,தேமுதிகவுடன் கூட்டணி இல்லைஎன்றும், தேவைப்பட்டால் தேமுதிகவுடன் இணைந்து செயல்படுவோம் என குழுப்பமாக பதிலளித்தார்.