காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை விரைந்து தேர்வு செய்யுங்கள் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். 

ராஜினாமா கடிதத்தை ஏற்கெனவே கொடுத்து விட்டதால் தான் காங்கிரஸ் கட்சி தலைவராக தற்போது இல்லை. ராஜினாமா கடிதம் அளித்து நீண்ட காலம் ஆன பிறகும் காங்கிரஸ் கட்சி தலைவராக தொடர முடியாது. தாமதிக்காம காங்கிர்ஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும். அதற்கான செயற்குழு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். புதிய தலைவரை தேர்தெடுக்கப்போவதிலும் தலையிடப்போவதில்லை என திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்கட்சி அந்தஸ்தை கூட எட்டிப்பிடிக்க முடியவில்லை. இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அவர் கடிதம் கொடுத்திருந்தார். உயர்மட்ட தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ராஜினாமா கடிதத்தை திரும்பபெற வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அவர் ராஜினாமாவிலிருந்து பின் வாங்க முடியாது என மறுத்து வந்தார்.