கேரள வயநாட்டில் ராகுல் காந்தி..! சோனியாவின் 2004 சென்டிமென்ட் கை கொடுக்குமா..?
நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி திடீர் என கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதன் பின்னணியில் ஒரு சென்டிமென்ட் இருப்பது தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி திடீர் என கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதன் பின்னணியில் ஒரு சென்டிமென்ட் இருப்பது தெரியவந்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சோனியா காந்தி பிறகு 1998 வாக்கில் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாறிய சோனியா காந்தி 2004 நாடாளுமன்றத் தேர்தலை தான் முதன்முதலாக மிகப்பெரிய வியூகத்துடன் எதிர்கொண்டார். அப்போது சோனியா காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதுமட்டுமல்லாமல் கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியிலும் சோனியா காந்தி 2004ல் களமிறங்கினார். அதாவது வட மாநிலங்களில் ஒரு தொகுதி தென் மாநிலங்களில் ஒரு தொகுதி என வியூகம் வகுத்து சோனியா போட்டியிட்டார்.
2004 தேர்தலில் ரேபரேலி தொகுதியில் மட்டும் அல்லாமல் பெல்லாரி தொகுதியிலும் சோனியா மகத்தான வெற்றிபெற்றார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சித் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தது. இதே போன்றதொரு சூழலில்தான் தற்போது ராகுல் காந்தி நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்கிறார். அதாவது ராகுல் காங்கிரஸ் தலைவராக தெரிவானதற்கு பிறகு நடைபெறும் முதல் நாடாளுமன்ற தேர்தல்.
சோனியா 2004ல் எப்படி வட மாநிலங்களில் ஒரு தொகுதி தென் மாநிலங்களில் ஒரு தொகுதி என களம் இறங்கினாரோ அதே பாணியில்தான் தற்போது ராகுலும் உத்தரபிரதேசத்தில் அமைதி கேரளாவின் வயநாடு ஆகிய தொகுதிகளை தேர்வு செய்து போட்டியிடுகிறார். இதன் மூலம் தென் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் வெற்றியைத் தேடித் தர முடியும் என்று அவர் நம்புகிறார். அதுமட்டுமல்லாமல் 2004ல் இரண்டு தொகுதிகளில் சோனியா காந்தி போட்டியிட்டதால் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடிந்தது. அதேபோல் ராகுல் காந்தியும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஆட்சிக்கு வர வைக்க முடியும் என்கிற சென்டிமென்ட் காங்கிரஸ் கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.