Asianet News TamilAsianet News Tamil

ஹாய்! என் பெயர் நரேந்திர மோடி.. நான் தான் இந்தியாவின் பிரதமர்!! மோடியை வச்சு செய்த ராகுல்

rahul gandhi teased prime minister modi
rahul gandhi teased prime minister modi
Author
First Published Mar 25, 2018, 4:59 PM IST

பிரதமர் நரேந்திர மோடி பெயரிலான செயலி, 2015–ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலியில் உள்ள பொதுமக்களின் சுய விவர தகவல்கள் திருடப்பட்டு உள்ளது தொடர்பாக பிரான்ஸ் சைபர் பாதுகாப்பு வல்லுனர் எலியட் ஆல்டர்சன், டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.  இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் செயலி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கத்தில், வணக்கம்! என் பெயர் நரேந்திர மோடி. நான் இந்தியாவின் பிரதமர். எனது அதிகாரப்பூர்வ செயலில் நீங்கள் பதிவு செய்யும் உங்கள் விவரங்களை அமெரிக்காவில் உள்ள எனது நண்பர்களின் நிறுவனங்களுக்கு கொடுத்து விடுவேன் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Hi! My name is Narendra Modi. I am India's Prime Minister. When you sign up for my official App, I give all your data to my friends in American companies.

Ps. Thanks mainstream media, you're doing a great job of burying this critical story, as always.https://t.co/IZYzkuH1ZH
— Rahul Gandhi (@RahulGandhi) March 25, 2018

இதனால் டுவிட்டரில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினருக்கு இடையே கடும் வார்த்தை போர் நடந்துவருகிறது.

Follow Us:
Download App:
• android
• ios