உண்மையை  பேசியதற்காக பாஜக என்னை மன்னிப்புக் கேட்கச் சொல்கிறது,  மன்னிப்பு கேட்க நான்   சாவர்க்கர்  அல்லராகுல் காந்தி என  அதிரடியாக பேசியுள்ளார் டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி இவ்வாறு பேசியுள்ளார் .  டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்  பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது .  இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ,  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பொதுச்செயலாளர், பிரியங்கா காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

அதில் பேசிய ராகுல் காந்தி நான் ரேப் இன் இந்தியா என்று பேசியதற்கு என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள்  என்றார் , மக்களின் உணர்களுக்கு மதிப்பளிக்காத  மத்தியஅரசு  மனம் போன போக்கில் மசோதாக்களை  கொண்டு வந்து சட்டமாக நிறைவேற்றி வருகிறது . பாலியல் வன்கொடுமை குறித்த தன் விமர்சனத்திற்கு   மன்னிப்பு கேட்கப்போவதில்லை ,  உண்மையயை பேசியதற்காக மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் .  மன்னிப்பு கேட்க நான் ஒன்றும்  சாவர்க்கர் அல்ல ராகுல்காந்தி என்று அவர் அதிரடியாக பேசியுள்ளார். 

முன்னதாக பேசிய  முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம்,  கடந்த 6 மாதங்களில் இந்திய பொருளாதாரத்தை மத்திய அரசு சீரழித்து விட்டது என குற்றம்சாட்டினார் இதனை  சரி செய்ய என்ன செய்வது என்று தெரியாமல்  மத்திய அமைச்சர்கள் தவியாய் தவித்து வருகின்றனர் என  அவர் குற்றம் சாட்டினார் .  பாஜக எதேச்சதிகார  மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்றும்  ராகுலை குறி வைத்த அவர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர் என்றும் அதில் பேசிய சோனியா காந்தி தெரிவித்தார்.