rahul gandhi criticize bjp on tuticorin firing issue
ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கும் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 100 நாட்களாக குமரெட்டியாபுரம் உள்ளிட்ட சில பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் நூறாவது நாளான நேற்று, ஆயிரக்கணக்கானோர், போலீசாரின் தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்றனர்.
போராட்டக்காரர்களை தடுப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்களும் பதிலுக்கு கற்களை வீசி தாக்கினர். இதனால் போராட்டம் வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களே எதிர்பார்க்காத வகையில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில், 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த கோர சம்பவம் மக்களிடையே கடும் கோபத்தையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிருக்காக போராடிய மக்களின் உயிரை பறித்த போலீசாரின் செயல், ஒட்டுமொத்த மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என்ற கேள்வி மக்கள் மனதில் பிரதானமாக எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை<br>நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.<a href="https://twitter.com/hashtag/SterliteProtest?src=hash&ref_src=twsrc%5Etfw">#SterliteProtest</a></p>— Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/999152800721526784?ref_src=twsrc%5Etfw">May 23, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
அதில், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கும் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது. தமிழ் சகோதர, சகோதரிகளே நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
