ragul gandhi wil become congress leader

குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல், சோனியா காந்தி உடல்நிலை ஆகியவை காரணமாகவும், காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் தள்ளிப்போகும் என்பதாலும் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்பதில் தாமதமாகும் என அந்த கட்சி வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோரிக்கைகாங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைவராக பொறுப்பு ஏற்க கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதற்கான தகுந்த சூழல் வராததால் தாமதமாகிக் கொண்டே வருகிறது. நல்லசெய்திசமீபத்தில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தீபாவளிப் பண்டிகைக்கு பின் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்து இ ருந்தார், அதற்கு ஏற்றார்போல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், ராகுல் காந்தி தலைவராக இம்மாத இறுதிக்குள் பதவி ஏற்பார் என தெரிவித்தனர். தீவிரம்இதனால், இமாச்சலப்பிரதேசம், குஜராத் சட்டசபைத் தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் உற்சாக எதிர்கொள்ள தொண்டர்கள் காத்திருந்தனர். அதற்கு ஏற்றார்போல், ராகுல் காந்தியும் கடந்த சில வாரங்களாக டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு கடும் கண்டனங்களை விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். நவம்.1க்கு முன்பாகஇதற்கிடையே டிசம்பர் மாதம் நடக்கும் குஜராத் சட்டசபைத் தேர்தலுக்காக அந்த மாநிலத்தின் தெற்கு பகுதியில் நவம்பர் 1-ந்தேதி முதல் 4 நாட்கள் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட செயற்குழு கூட்டம் இம்மாதத்தில் கூட்டப்பட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த உயர் அதிகாரம் கொண்ட குழுவே கட்சியின் தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் படைத்ததாகும். இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி தலைவராக ேதர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின், தலைவராக குஜராத் பயணத்தை தொடங்குவார் என்றும் கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது. தாமதாகும்ஆனால், இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடக்க வாய்ப்பில்லை என காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், குஜராத், இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் கூட்டணி உருவாக்குவதிலும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்பதால், ராகுல் தலைமை ஏற்பதில் தாமதமாகும் எனத் தெரிகிறது. மேலும், சோனியா காந்தியின் உடல் நிலையும் இன்னும் முழுமையாகச் சீராகவில்லை எனத் தெரிகிறது. அதேசமயம், குஜராத், இமாச்சலப் பிரதேசம் தேர்தல் முடிந்த பின்பும், டிசம்பர் 31-ந்தேதி வரை காலக்கெடு இருப்பதால், அதற்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீர்மானம்இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பு, மகிளா காங்கிரஸ், சேவா தளம் ஆகியவை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தலைமை ஏற்க தீர்மானம் போட்டுவிட்டன. குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியே தலைவராக நியமிக்க தீர்மானம் போட்டுவிட்டது. கடந்த 24-ந்தேதி கூடிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, எந்த முடிவுகளையும் அடுத்த அறிவிக்க 15 நாட்கள் வரை தேவைப்படும் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.