கன்னியாகுமரியில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூயில் நடைபெற்ற கலந்தரையாடல் நிகிழ்ச்சியில் பங்கேற்று மாணவிகளின் சரமாரியான கேள்விகளுக்கு, பதில் அளித்து பேசினார்


.
தற்போது, நாடு முழுவதும், கொள்கை ரீதியான போர் ஏற்பட்டுள்ளது. ஒன்று, நாட்டில் உள்ள அனைத்து மாநிலத்தவரும், இனத்தவரும், மொழியினரும் சமமாக கருதப்பட்டு, சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும். ஒருவரை, மற்றொருவர் ஆதிக்கம் செலுத்தக் கூடாது; அழுத்தம் தரக் கூடாது என்ற, கொள்கை உள்ளது.

இன்னொரு பக்கம், பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையான, அனைத்து மாநிலத்தவர், இனத்தவர், மொழியினர், ஒரே மையத்தின் ஆதிக்கத்தில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதாகும். இந்த நிலையில், உங்கள் கேள்விகளை எதிர்கொள்கிறேன். எளிமையான கேள்விகளை விட்டு விட்டு, கடினமான கேள்விகளையே கேளுங்கள் என்றார் ராகுல் 

.அஸ்ரா என்ற பெண் தனது கேள்வியை கேட்கும்முன் சார் என தொடங்கினார். அதற்கு ராகுல் தன்னை சார் என்று அழைக்க வேண்டாம் என்றும், ராகுல் என்றே கூப்பிடுங்கள் என்றும் தெரிவித்தார். அதற்ழ அரங்கமே அதிர்ந்தது.

உடனே அந்த மாணவி ஹாய் ராகுல் என தொடங்கினார். நாட்டின் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமான, டாடா ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம், சமீபத்தில், நிதி நெருக்கடிக்கு ஆளாகி, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது போன்ற பொருளாதார பிரச்னைகளை சமாளிக்க, நீங்கள் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? என்றார்.


 
கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு, நம் நாட்டில் குறைந்த நிதியே செலவிடப்படுகிறது. நாங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வி முன்னேற்றத்துக்கு, தேவையான நிதியை ஒதுக்குவோம். அனைத்தையும் கண்மூடித்தனமாக, தனியார் மயமாக்குவதற்கு பதில், அரசு கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவோம். அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும், ஒரே கொள்கை அமைப்போம் என கூறி அசத்தினார்.

குஷி என்ற மாணவி பெண்களுக்கு சம உரிமை கிடைக்க, உங்கள் திட்டங்கள், எந்த அளவுக்கு உதவும்என கேள்வி எழுப்பினார்?

அதற்கு பதில் அளித்த ராகுடல உத்தர பிரதேசம், பீஹார் போன்ற, வட மாநிலங்களை ஒப்பிட்டால், தென் மாநிலங்களில், பெண்களின் நிலை சிறப்பாக உள்ளது. இங்கு, பெண் அரசியல் தலைவர்களே உருவாகியுள்ளனர். இன்னும் மேம்பட வேண்டும். நாடு முழுவதும், பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளை பார்க்கும்போது, பெண்களின் பங்கு போதிய அளவில் இல்லை. இதற்கு, 33 சதவீத இட ஒதுக்கீட்டில், பார்லிமென்ட், சட்ட சபைகள் மற்றும் அரசு துறைகளில், பெண்களுக்கு முக்கிய இடம் கிடைக்க, சட்டம் ஏற்படுத்துவோம்.

பெண்களின் மீதான எண்ணங்களும், பார்வையும் மாற வேண்டும். ஆண்களுக்கு பெண்கள், எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. உண்மையில், ஆண்களை விட, பெண்கள் மேலானவர்கள்; 'ஸ்மார்ட்' ஆனவர்கள்.என பதில் அளித்து அப்ளாஸ் அள்ளினார்.

மறறொரு மாணவி எதிர்க்கட்சியான நீங்கள், பல்வேறு ஊழல் பிரச்னைகளில், பெரும்பாலும் அமைதியாக இருந்துள்ளீர்களே? குறிப்பாக, உங்கள் மைத்துனர் ராபர்ட் வாத்ரா தொடர்பான பிரச்னையில், எதுவும் பேசவில்லையே? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி,  ராபர்ட் வாத்ரா விவகாரத்தில், நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சட்டம் அனைவருக்கும் சமமானது. சட்டத்தின் அடிப்படையில், யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். அனைவர் மீதும், சட்ட நடவடிக்கை சமமாக இருக்க வேண்டும். ஒரு சிலர் மீது மட்டும், சட்ட நடவடிக்கை என்பது பாரபட்சமானது. ராபர்ட் வாத்ராவிடம் விசாரணை நடத்தட்டும். அதற்கு, முதல் ஆளாக, நான் ஆதரவு தெரிவிக்கிறேன் என்றார்.