ragul gandhi got black belt in akito

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஜப்பானிய தற்காப்பு கலையான ‘அகிடோ’வில் சமீபத்தில் ‘பிளாக்பெல்ட்’ வாங்கியுள்ளார். அதை இப்போது, அந்த கட்சி முறைப்படி வெளியிட்டுள்ளது.

புகைப்படம்

47-வயதான ராகுல் காந்தி, தனது பயிற்சியாளருடன் ஒரு மணிநேரம் அகிடோ கலையில் நேற்று முன்தினம் பயிற்சி எடுத்தார். அதை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு, ராகுலுக்குஅகிடோ தெரியும் என்பதை தெரிவித்துள்ளது.

அரசியல்வாதிகள் விளையாடுவார்களா?

சமீபத்தில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் விஜயேந்தர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “ எனக்கு தெரிந்து, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ரிப்பன் வெட்டி சிலவற்றை தொடங்கி வைக்கிறார்கள். விளையாடி நான் பார்த்ததே இல்லை. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தான் விளையாடும் விளையாட்டுகள் குறித்த வீடியோவை வெளியிட வேண்டும்.

ஆனால், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும்தான் குத்துச்சண்டை, மல்யுத்தம் செய்வதை மக்கள் பார்க்கிறார்கள். அதுவே மக்களுக்கு ஊக்கமாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

பிளாக்பெல்ட்

இதையடுத்து, கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “ நான் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் விளையாடுகிறேன். நாந் அகிடோ தற்காப்பு கலையில் ‘பிளாக்பெல்ட்’ வாங்கி இருக்கிறேன். ஆனால், இதை வெளிப்படையாக யாரிடமும் கூறுவதில்லை. என் வாழ்வில் விளையாட்டு மிகவும் அவசியமானது’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி அகிடோ தற்காப்பு கலை பயிற்சி எடுத்ததை புகைப்படமாக எடுத்து ஆதாரப்பூர்வமாக நேற்று வெளியிட்டுள்ளது.

நன்கு தேர்ந்தவர்

இது குறித்து இந்திய அகிடோ அகிகாய் அமைப்பில், ராகுல் காந்தியுடன் பயிற்சி எடுத்துவரும் பாரத்வாஜ்வினாயக்ராம் என்பவர் டுவிட்டரில் கூறுகையில், “ ராகுல் காந்தி அகிடோ கலையை நன்கு கற்று தேர்ந்தவர். ஆனால், அவரின் போட்டோ போலியானது எனக் கூறுவது வேதனையானது. ராகுல் காந்தியின் புகைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும், நம்ப வேண்டும்.