பத்திரப்பதிவு துறை ஊழல்... அமைச்சர் மூர்த்தி திடுக் குற்றச்சாட்டு..!

அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறை என்பது ஊழல்துறையாக இருந்ததாக அமைச்சர் மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
 

Ragistration department corruption ... Minister Moorthy accused of harassment ..!

அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறை என்பது ஊழல்துறையாக இருந்ததாக அமைச்சர் மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை, புதூர் பகுதியில் 5 லட்ச ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’தமிழ்நாட்டில் பத்திரப் பதிவுத் துறை என்பது ஊழல்துறையாக இருந்தது.Ragistration department corruption ... Minister Moorthy accused of harassment ..!

அதனை தடுக்க 50 நாட்களில் பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறோம். அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது. போலியான பத்திரப் பதிவு போன்ற முறைகேடுகள் நடந்துள்ளன. அதன்மீது நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். Ragistration department corruption ... Minister Moorthy accused of harassment ..!

50 நாட்கள் ஆட்சி என்பது மக்கள் விரும்பும் ஆட்சியாக உள்ளது. திமுக அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறது. போலிப் பத்திரப் பதிவை தடுக்கும் வகையில்  பத்திர பதிவுத்துறையும் வெளிப்படையாக பதிவு செயல்பட்டுவருகிறது’’என்றும் கூறினார். அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறை அமைச்சராகவும் இருந்தவர் ஆர்.பி.உதயகுமார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios