அரசு குறித்து நடிகர் கமல் விமர்சனம் செய்தது தவறில்லை எனவும், ரஜினிகாந்த் விமர்சிக்கும்போது வாய்மூடி கிடந்த அமைச்சர்கள் கமலை விமர்சிப்பது முறையல்ல எனவும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். 
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் தமது ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை எனவும், தான் அரசியலுக்கு வரமேட்டேன் என யாராவது நினைத்தால் அது தவறு எனவும் குறிப்பிட்டு பேசினார். 
இதுகுறித்து வெகுவாக விமர்சனங்களும் வரவேற்புகளும் எழுந்தன. ஆனால் அமைச்சர்கள் பெரிதாக இதை கண்டுகொள்ளவில்லை. 
இதைதொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமலஹாசன் தனியார் டிவியில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து செய்தியாளர் சந்தித்து ஒன்றை நடத்தினார்.
அதில் பேசிய கமல் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை எனவும் இதை ரஜினி இப்போது சொல்கிறார் தான் எப்போதோ சொல்லிவிட்டேன் என தெரிவித்தார். 
இதனால் ஆத்திரமடைந்த தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் அன்பழகன் பேசுகையில் கமல் ஒரு ஆளே கிடையாது அவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என வார்த்தைகளை வீசினார். 
அதேபோல், சிவி சண்முகம் பேசுகையில் பணத்துக்காக கமல் எதையும் செய்வார், அரசை விமர்சிக்க அவருக்கு யோக்கியதை இல்லை என தெரிவித்தார். 
மேலும் அமைச்சர் வேலுமணி பேசுகையில் கமல் இதுபோன்ற கருத்துக்களை நிறுத்தி கொள்ளவில்லையெனில் அவதூறு வழக்கு தொடர்ப்படும் என மிரட்டல் விடுத்தார். 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய நடிகர் ராதாரவி தரக்குறைவாக பேசும் அமைச்சர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். 
அரசு குறித்து நடிகர் கமல் விமர்சனம் செய்தது தவறில்லை எனவும், ரஜினிகாந்த் விமர்சிக்கும்போது வாய்மூடி கிடந்த அமைச்சர்கள் கமலை விமர்சிப்பது முறையல்ல எனவும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.