question raise against Gun shoot
‘தூத்துக்குடியில் ஜாலியன் வாலாபாக்’ என்றும், ‘அரச பயங்கரவாதத்தின் கொடூர உதாரணம்’ தான் நேற்றுப் பட்டப் பகலில் அரங்கேறியிருக்கிறது.உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆலையை இழுத்து மூட அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது போலீஸ் நடத்திய இந்த கொலைவெறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக இதில் 13 பேர் பலியாகி உள்ளனர்

போராட்டத்தில் குதிப்பவர்களை, கொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு திட்டம் போட்டு இந்தத் தாக்குதலை நடத்தியதால், உசிலம்பட்டி ஜெயராம், லூர்தம்மாள் புரம் கிளாஸ்டன், சிலோன் காலனி கந்தையா, வெனிஸ்டா (17 - பெண்) தூத்துக்குடி, புரட்சிகர இளைஞர் முன்னணி குறுக்குசாலை தமிழரசன், மாசிலாமணி புரம் சண்முகம், தூத்துக்குடி அந்தோணி செல்வராஜ், தூத்துக்குடி மணிராஜ் ஆகியோரும் மேலும் சில பெண்களும் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டனர். பலர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர்.

முதலில், கூட்டத்தை விலக்க சொல்ல வேண்டும், அப்படி அது முடியவில்லைஎன்றால், கண்ணீர் புகை குண்டு வெடிக்க செய்ய வேண்டும். இத கட்டுப்படுத்து முடியாத அடுத்தகட்டமாக லேசான தடியடி நடத்த வேண்டும். இவை பலன் தராவிட்டால், கலவர கொடியை உயர்த்தி மெகா போனில் முன்னெச்சரிக்கை கொடுத்து வானத்தை நோக்கி சுடவேண்டும்.

இறுதியாக இவை யாவும் பலன் தராத போது, முழங்காலுக்கு கீழே சுடலாம் என உங்களுக்கு தெரியாதா? இவையெல்லாவற்றிலும் பழிவாங்கும் நோக்கம் இருக்க கூடாது. இப்படி துப்பாக்கி சூடு பற்றி சட்டமே சொல்லியிருக்கும் நிலையில் நீங்கள் செய்திருக்கும் இந்த கொலைவெறி தாக்குதலை என்னவென்று சொல்வது?
அடுக்கடுக்காக அரசை நோக்கிப்பாயும் கேள்வித் தோட்டாக்கள்...
போலீசார்களுக்கென்று சீருடை இருக்கும்போது, போராட்டக் களத்திற்கு முதலில் எதற்காக மப்டியில் வரவேண்டும்?
எதற்கு பயங்கர ஆயுதங்களான அதிநவீன துப்பாக்கியுடன் வரவேண்டும்?
சாதாரண போலீசார் வந்திறங்காமல், எதற்காக கமாண்டோக்கள் இறக்கப்பட்டார்கள்?
துப்பாக்கி சூடு நடத்தும் உத்தரவை காவலர்களுக்கு யார் பிறப்பித்தது?
கலவரம் நடந்தால் முதலில் முதலில் கைது தானே செய்திருக்க வேண்டும்?
வானத்தை நோக்கிதானே துப்பாக்கியால் சுட்டிருக்க வேண்டும்?
எல்லைமீறி போராட்டக்காரர்கள் நடந்துகொண்டால், முட்டிக்கால் பார்த்துதானே சுட வேண்டும்?
எப்படி வாயில், நெற்றியில், நெஞ்சை நோக்கி குறிபார்த்து சுட்டது ஏன்?
வன்முறை, கலவரம், போராட்டக்களம் என சொல்லும் போது ஒரு போலீசாரோ அரசு அதிகாரிகளோ உயிரிழக்கவில்லையே அது மட்டும் எப்படி?
டிஜிபி உத்தரவு இல்லாமலேயே இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றதா?
பொதுமக்களே அதிகம் கூடாத இடத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது எப்படி?
எந்த போலீசார் மீதும் எதிர்தாக்குதல் என்பது நடத்தியதாகவே தெரியவில்லையே?
நீண்ட தூரத்திலிருந்து குறிப்பிட்ட ஆட்களை மட்டும் குறிபார்த்து சுட்டுத்தள்ள காரணம் என்ன?
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை என்ற அறிவிப்பு தெரிந்தும் கலெக்டர் எங்கே போனார்?
ஒரு தாசில்தார் அலுவலகத்தில் இருந்ததாக கூறப்படும் ஆட்சியர் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டத்தில், அதுவும் தன்னுடைய அலுவலகத்திலேயே இவ்வளவு அக்கிரமங்களும் அரங்கேறும்போது, சம்பவ இடத்தில் அவர் இல்லாமல் போனது ஏன்?
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமுலில் உள்ள சமயத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆயுதம் தாங்கிய போலீசார்கள் உள்ளே நுழைந்தது எப்படி?
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நேற்றுமுன்தினம் இரவில் முடிவு செய்து அறிவிக்க யார் காரணம்?
யார் அந்த மஞ்சள் டீஷர்ட் போட்டவர்?
நேராக மக்களை பார்த்து நெஞ்சில், வாயில் என்று எப்படி சுட்டு தள்ள முடியும்?
தானியங்கி துப்பாக்கிகள் எந்த சட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்டது?
ரப்பர் அல்லது பிளாஸ்டிக் தோட்டாக்களை பயன்படுத்தவில்லை?
இது துப்பாக்கி சூடா இல்லை... திட்டமிட்ட என்கவுண்டரா? பதில் சொல்லுங்க...
ஆலையை பாதுகாக்க ஏன் இவ்வளவு மும்முரமாக செயல்பட்டு, யாரை பாதுகாக்க இந்த காவு வாங்கும் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என பதில் சொல்ல முடியாத பல கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.
