Asianet News TamilAsianet News Tamil

பாஜகவை கழற்றிவிட்டு அதிமுகவுடன் புதிய தமிழகம் கூட்டணி? என்ன காரணம் தெரியுமா?

மக்களவை தேர்தல் தேதி மார்ச் 15ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே  தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில்  அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டார். 

Puthiya Tamilagam alliance with AIADMK tvk
Author
First Published Mar 3, 2024, 7:04 AM IST

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். 

மக்களவை தேர்தல் தேதி மார்ச் 15ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே  தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில்  அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக மக்களவை தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தற்போது அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ கட்சிகள் கூட்டணியிலுள்ள நிலையில் பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: தேமுதிக கேட்கும் 4+1.. பிரேமலதாவை சந்தித்த அதிமுக தலைவர்கள்.. இறுதிக்கட்டத்தை எட்டிய கூட்டணி.!

Puthiya Tamilagam alliance with AIADMK tvk

இந்நிலையில், கடந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கிருஷ்ணசாமி இந்த முறையும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவுடன் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளது. இதனால் கிருஷ்ணசாமி மீண்டும் அதிமுக கூட்டணியில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகின. 

இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்த தேமுதிக வேட்பாளர்.! குஷியில் இபிஎஸ்.! அதிர்ச்சியில் பிரேமலதா!

Puthiya Tamilagam alliance with AIADMK tvk

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்தார். அப்போது தனக்கு தென்காசி தொகுதியை ஒதுக்குமாறு கிருஷ்ணசாமி இபிஎஸ்யிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios