Asianet News TamilAsianet News Tamil

புதுச்சேரி: 3 நியமன எம்எல்ஏக்கள் பாஜக-வா..? தமிழிசைக்கு கடும் எதிர்ப்பு..!

மூன்று பேரும் சட்டரீதியாக கட்சி சார்பில் அங்கீகரிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் இல்லை. 

Puducherry 3 nominated MLAs from BJP?  opposition to Tamilisai
Author
Pondicherry, First Published Feb 19, 2021, 11:38 AM IST

3 நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிட்டதற்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு, அரசு கொறடா அனந்தராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெறாத நியமன எம்எல்ஏக்களை கட்சி ரீதியாக எடுத்துக் கொள்ள முடியாது. பொறுப்பு ஆளுநர் தமிழிசை மூன்று நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிடுவது தவறு. 3 நியமன எம்எல்ஏக்களின் கட்சி ரீதியாக எடுத்துக் கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது. புதுச்சேரியை சேர்ந்த மூன்று நியமன எம்எல்ஏகளை கட்சி சார்பில் குறிப்பிட்டாமல் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு. தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது. Puducherry 3 nominated MLAs from BJP?  opposition to Tamilisai

3 நியமன எம்எல்ஏக்களின் பாஜக என்று கூட எந்தவித முகாந்திரமும் இல்லை. மூன்று பேரும் சட்டரீதியாக கட்சி சார்பில் அங்கீகரிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் இல்லை. மூன்று நியமன எம்எல்ஏ க்களும் கட்சி ரீதியாக எடுத்துக்கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது. எதிர்க்கட்சியில் 7 என்.ஆர்.காங்கிரஸ், 4 அதிமுக, 3 பாஜக பலம் உள்ளது என நாராயணசாமிக்கு தமிழிசை கடிதம் எழுதியுள்ளார்.

Puducherry 3 nominated MLAs from BJP?  opposition to Tamilisai

மத்திய அரசால் நியமிக்கப்படும் நியமன எம்எல்ஏக்களை பாஜகவினர் என சொல்வது அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே வாக்களிக்க அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் கூறினாலும் பாஜகவைச் சேர்ந்தவர் என ஆளுநர் குறிப்பிடுவது தவறு ” என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios