தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை தொடர்ந்து பொது போக்குவரத்துக்கும் அதிரடியாக தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை தொடர்ந்து பொது போக்குவரத்துக்கும் அதிரடியாக தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து, பாதிப்பு அதிகரித்தாலும் 5ம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. 

இதனையடுத்து, திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைப்படி முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஜூலை 31-ம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பொது போக்குவரத்து தொடங்கினால் தமிழகம் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில், மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தும் அதிரடியாக தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.