Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் பொது முடக்கமா..? இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

 தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் இன்று நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என கடந்த மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

Public shutdown again ..? Chief Minister Edappadi Palanisamy is making an important announcement today ..!
Author
Tamil Nadu, First Published Oct 31, 2020, 11:59 AM IST

தமிழகத்தில் பொது முடக்கம் இன்றுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் கூடுதல் தளர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது. கொரொனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் இன்று நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என கடந்த மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.Public shutdown again ..? Chief Minister Edappadi Palanisamy is making an important announcement today ..!
 
இன்றுடன் பொதுமுடக்கம் முடிவடைய இருப்பதால் அதை நீட்டிப்பதா அல்லது கூடுதல் சலுகைகள் வழங்குவதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 28ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள் முன்வைத்த ஆலோசனையின் அடிப்படையில் முதலமைச்சர் இன்று புதிய தளர்வுகளை அறிவிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி அளிக்கப்படுமா என்பது இன்று தெரியவரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios