Asianet News TamilAsianet News Tamil

யூ டியூப் மூலம் கோடி கோடியாய் சம்பாதித்த பப்ஜி மதன்... 2 ஆடி கார்கள் பறிமுதல்..!

யூடியூப் மூலம் ஆபாசமாக சம்பாதித்து வாங்கிய பப்ஜி மதனின் 2 ஆடி கார்களை காவல்துறையினர் பறிமுதல்  செய்தனர்.

pubji Madan earns crores of rupees through YouTube ... 2 Audi cars confiscated ..!
Author
Tamil Nadu, First Published Jun 18, 2021, 12:50 PM IST

யூடியூப் மூலம் ஆபாசமாக சம்பாதித்து வாங்கிய பப்ஜி மதனின் 2 ஆடி கார்களை காவல்துறையினர் பறிமுதல்  செய்தனர்.

சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 159 க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்த நிலையில், தலைமறைவாக இருந்த யூ- டியூபர் மதனை தருமபுரியில் தனிப்படை போலிசார் கைது செய்தனர்.

pubji Madan earns crores of rupees through YouTube ... 2 Audi cars confiscated ..!

தடைசெய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் கேமில் விளையாடுவது எப்படி போன்ற வீடியோக்களை யூ-டியூப்பில் பதிவிட்டு மாதம் 7 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தவர் மதன். இதனால் இவரை 'பப்ஜி மதன்' என்றே பலரும் அழைத்தனர். ஆரம்பத்தில் பப்ஜி விளையாட்டின் நுணுக்கங்களை பற்றி கூறிய இவர், பிறகு  தன்னோடு விளையாடும் சக பெண்களிடம் கொச்சையாகவும், பாலியல் ரீதியாகவும் பேசி வந்தார். அவரின் இந்த பேச்சை ரசித்து 8 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.pubji Madan earns crores of rupees through YouTube ... 2 Audi cars confiscated ..!

அப்படி பின்தொடர்பவர்களிடமிருந்து அவர் குறிப்பிட்ட அளவு தொகையையும் வசூலித்திருக்கிறார்.  அவரது பேச்சிக்காகவும், அவரது பாலியல் சீண்டல்களுக்காகவும் அவர் மேல் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. 159 புகார்கள் அவர் மீது பதிவாகியுள்ளன. இதனால் அவர் தலைமறைவானார். அதன் பின் அவரது  யூ-டியூப் பக்கத்தை நிர்வகித்து வந்ததற்காக அவரது மனைவி கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை தனிப்படை போலீசார் கடந்த 3, 4 நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், யூடியூபில் ஆபாசமாக ஆடியோவை வெளியிட்ட மதன் தருமபுரியில் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து மதனை கைது செய்துள்ளனர்.

pubji Madan earns crores of rupees through YouTube ... 2 Audi cars confiscated ..!

இந்நிலையில், மதன் மனைவி கிருத்திகா வங்கிக் கணக்கில் ரூ. 4 கோடி இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக வாழ்ந்து வந்ததாக காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2018ம் ஆண்டு ஹோட்டல் நடத்துவதாக கூறி ரூ.5 லட்சம் வரை பணம் பெற்று வங்கி மோசடியில் ஈடுபட்ட மதன் தனது முகத்தை காட்டாமலேயே யூடியூப் சேனல் நடத்தியது அம்பலமாகி உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios