காங், கம்யூனிஸ்ட், திமுக வின் தேசவிரோதத்தை தோலுரிக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார்.

17 ஐ.எஸ் ஆதரவாளர்ஜள் கைது எதிரொலியாக தமிழக போலீஸுக்கு தீவிரவாதிகள் சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை சுட்டிக்காட்டி எச்சரித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘’பிரச்சினையின் தீவிரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சிஏஏ போராட்டங்கள் ஆகியவை வெறும் போர்வை மட்டுமே. உண்மையில் தேசப் பிரிவினையின் முன்பிருந்த இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு நாட்டை இட்டுச்செல்லும் முயற்சியே இவைகள். காங், கம்யூனிஸ்ட், திமுக வின் தேசவிரோதத்தை தோலுரிப்போம்.

திராவிட இனவாதம் பேசி வருவோர் கற்பனையான பிரிவினைகளையும்  வேற்றுமைகளையும் வளர்த்து வருகிறார்கள். இவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களின் நலனில் அக்கறையுடையவர்கள் அல்ல. ஜாதி வாதம் பேசி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கத் துடிக்கும் சுயநலவாதிகள். தமிழ்நாட்டுக்கு பெரும் துரோகம் செய்கிறவர்கள்’’எனத் தெரிவித்துள்ளார்.