புதிதாக நியமிக்கப்படும் மாநிலத் தலைவர் தலைமையில் நான்கு-ஐந்து செயல் தலைவர்களை நியமிப்பது இரண்டாம் முடிவு ஆகும். 

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை மீட்கும் வகையில் 3 யோசனைகளை அக்கட்சியின் பொறுப்பாளர் பிரியா காந்தி முன் வைத்துள்ளார்.

படுதோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி

அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியின் வேட்பாளர்கள் 399 இடங்களில் டெபாசிட்டை பரிதாபமாக இழந்தனர். உத்தரப்பிரதேச தேர்தலுக்காக பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறகப்பட்டார். என்றாலும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு தன்னுடைய கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க மூன்று யோசனைகளை அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான பிரியங்கா காந்தி முன்வைத்திருக்கிறார். 

பிரியங்கா புதிய முடிவு

புதிய முடிவுகளை அமல்படுத்துவது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பிரியங்கா காந்தி இன்று விவாதித்தார். அதனை தொடர்ந்து, கட்சி தலைவர் சோனியா காந்திக்கு மூன்று பரிந்துரைகளையும் பிரியங்கா காந்தி அனுப்பி இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியில் மாற்றம் ஏற்படும் வகையிலும் மறுமலர்ச்சி ஏற்படும் வகையிலும் இந்த முடிவுகளை பிரியங்கா முன் மொழிந்துள்ளார். இதன்படி இதுவரை நடைமுறையில் இருந்து வரும் சில மூத்த தலைவர்களின் தலைமையில் காங்கிரஸ் கமிட்டியை மீண்டும் அமைப்பது முதல் முடிவாகும்.

காங்கிரஸ் மீளுமா?

அடுத்ததாகப் புதிதாக நியமிக்கப்படும் மாநிலத் தலைவர் தலைமையில் நான்கு-ஐந்து செயல் தலைவர்களை நியமிப்பது இரண்டாம் முடிவு ஆகும். மூன்றாவதாக மாநிலத் தலைவர், கட்சி அமைப்பை அடிமட்டத்தில் இருந்து மீட்டெடுக்கக் கூடிய ஒருவராக இருக்க வேண்டும். மேலும் மாநிலத்தை 4 மண்டலங்களாக பிரித்து, மேற்கு உத்தரப் பிரதேசம்., கிழக்கு உத்தரப் பிரதேசம், அவத் மற்றும் பந்தல்கண்ட் என ஆகியவற்றை மண்டலங்களாகப் பிரித்து, நான்கு மண்டலங்களுக்கும் சுயேட்சையாகக் குழுக்களை அமைப்பது மூன்றாவது யோசனை ஆகும். இந்த முன்று முடிவுகளையும் சோனியா காந்தி ஏற்றுக்கொண்டால், அது உத்தரப் பிரதேசத்தில் அமல்படுத்தப்படும். உத்தரப் பிரதேசத்தில் புதிய தலைவர் நியமிக்கப்படாததால், கட்சியின் தினசரி பணிகளை, மூத்த பொதுச் செயலாளர் தினேஷ் சிங் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.