’ஊரடங்கை மீறுகிறார்களென மக்களை அடிக்கிறீர்கள். அழிவுநோய் வருவது 3 மாதமாக அறிந்தும் நடவடிக்கை எடுக்காத பிரதமரை என்ன செய்யபோகிறீர்கள்? 

அழிவுநோய் வருவது 3 மாதமாக அறிந்தும் நடவடிக்கை எடுக்காத பிரதமரை என்ன செய்யபோகிறீர்கள்? என திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 341 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, மூன்றே நாட்களில் 606ஆக இடு மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 23 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததை அடுத்து நாடு முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு குறித்து பிரதமர் மோடிக்கு மே.17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘’ஊரடங்கை மீறுகிறார்களென மக்களை அடிக்கிறீர்கள். அழிவுநோய் வருவது 3 மாதமாக அறிந்தும் நடவடிக்கை எடுக்காத பிரதமரை என்ன செய்யபோகிறீர்கள்? கொரொனா பரவும் போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகைக்காக ஏழை மக்களை மறைக்கும் சுவர் எழுப்பிக் கொண்டிருந்தவரை நோக்கி என்ன கேள்வி கேட்க போகிறீர்கள்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார். 

Scroll to load tweet…