வெற்றியை அடுத்து மோடி எடுத்த அதிரடி முடிவு...! 

நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியதும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள பெயரின் பின்னால் சவ்கிதார் என மாற்றி இருந்தார்.

பின்னர் மோடியின் ஆதரவாளர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் பெரும்பாலானோர் தங்களது பெயருடன் சவ்கிதார் அதாவது காவலாளி என மாற்றியிருந்தனர். இதனை எதிர் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.

மக்களின் மனதை மாற்றுவதற்காக தேர்தல் வரும் சமயத்தில் இது போன்ற விஷயங்களில் பாஜக ஈடுபடுகிறது என பல்வேறு குற்றச்சாட்டை முன் வைத்தனர். தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி 300க்கும் மேற்பட்டவர்களில் பாஜக வெற்றியை நிர்ணயித்து உள்ளது. இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் தன் பெயருடன் சேர்த்து இருந்த சவ்கிதார் என்ற வார்த்தையை நீக்கி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.