2020- 2021 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும் நோக்கில் முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து பிரதமர் ஆலோசனை நடத்தியுள்ளார் 2020- 2001 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வருகிற ஒன்றாம் தேதி தாக்கல் செய்கிறார் நாட்டின் பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவிற்கு மிக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது நாடுமுழுவதும் வேலைவாய்ப்பின்மை ,  தொழிற்சாலைகள் மூடல் ,  வறுமை என மிக மோசமான சூழல் நிலவி வருகிறது.

பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் நிலையில் ,  அதை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும் நோக்கில் இந்திய பட்ஜெட்டை அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது இந்நிலையில் நாட்டின் மிகப் பெரும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார் இதில் முகேஷ் அம்பானி ,  ரத்தன் டாட்டா , சுனில் பாரதி மிட்டல்,  கௌதம் அதானி ,  அணில் அகர்வால் ,  ஆனந்த் மகேந்திரா,  வேணு சீனிவாசன்,  சந்திரசேகரன் உள்ளிட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் தற்போது உள்ள நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது வளர்ச்சியை ஊக்குவிப்பது வேலைவாய்ப்புகளை பெருக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது .

எப்போதும்  இல்லாத அளவிற்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம்  4.5 சதவீதமாக உள்ள கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு அந்நிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் புதிதாக அமைக்கப்படும் உற்பத்தி நிறுவனங்கள் 15 சதவீத வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன மேலும் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இவ்வாறு பொருளாதார வளர்சிக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில் தொழிலதிபர்களுடனான சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .