நாட்டின் பொருளாதாரம் குறித்து பிரதமர் மோடிக்கு பல முறை எடுத்துக் கூறியும் அது அவருக்கு புரியவில்லை என பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியசாமி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார் .  ஏற்கனவே  நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதார அறிவு கொஞ்சம்கூட இல்லை என கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பிரதமர் மோடியையும் தற்போது சு.சாமி விமர்சித்துள்ளார்.  இது பாஜகவினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 மற்ற கட்சித் தலைவர்களை மட்டுமல்லாமல் தன் சொந்த காட்சி தலைவர்களையும் தைரியமாக விமர்சிப்பவர் சுப்ரமணியசாமி என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் அதற்கொன்று பிரதமரையேவா இப்படி விமர்சிப்பார் என்று தன் சொந்தக் கட்சிக்காரர்களே  வாய் பிளக்கும் அளவிற்கு பேசியுள்ளார் அவர். அதாவது  நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை,  மற்றும் வெங்காய விலை உயர்வு ஆகியவற்றை குறித்து  கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியசாமி வெங்காய விலை உயர்வு நமது அரசின் தோல்வியை காட்டுகிறது என்றார் . மக்களின் கைகளில் பணம் இல்லை அப்படியே இருந்தாலும் அதை செலவு செய்ய மக்கள் பயப்படுகிறார்கள்.  காரணம் மீண்டும் அந்த பணத்தை சம்பாதிக்க முடியுமா என்ற அச்சம்தான் காரணம் .  அந்த அளவிற்கு நாட்டின் பொருளாதார நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்றார். 

தற்போதைய பொருளாதார நிலை குறித்து இதுவரை பிரதமருக்கு ஏழு முறை கடிதம் எழுதிவிட்டேன் . ஆனாலும் பிரதமருக்கு பொருளாதாரம் புரியவில்லை ,  அவருக்கு பொருளாதாரம் புரியவேண்டும் ஆனால் அவருக்கு புரியாது ,  பொருளாதாரத்தில் மாற்றம் வந்தால் தான் இது எல்லாம் சரியாகும் என அதிரடியாக கருத்து கூறியுள்ளார்.  தன் சொந்த கட்சியைச்  சேர்ந்த  தலைவர்களை விமர்சித்துப் பேசி வந்த நிலையில்,  தற்போது பிரதமரையே சுப்ரமணியசாமி விமர்சித்துள்ளது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .