கொரோனா பாதிப்பு எதிரொலியாக பிரதமர் மோடியின் வங்கதேச பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்  நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது .  இது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் ,  இந்தியாவில் இதற்கு சுமார் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் இந்தியாவில் உருவான இந்த வைரஸை தடுக்க அரசு பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா  வைரஸ் பாதிப்பு எதிரொலியால் பிரதமர் மோடியின் வங்கதேச பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

 அதாவது குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதைத்  தொடர்ந்து கடந்த டிசம்பரில் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மேமன் மற்றும் உள்துறை அமைச்சர் ஆசாதுஸ்மான் கான் ஆகியோர் இந்தியாவுக்கான பயணங்களை ரத்து செய்தனர் .  இந்த பிரச்சனையை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா தெரிவித்தாலும்  இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் பாதித்தன .  இந்நிலையில்  வங்கதேசத்திலும் கொரோனா வைரஸ் தாக்கும் அதிகரித்துள்ளது .  இதுவரை இந்த வைரசுக்கு வங்கதேசத்தில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது . இந்நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் வங்க தேசத்தில்  அந்நாடு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது .

இந்நிலையில் வங்கதேச நிறுவனர் ஷேக் முஜிபுர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா அழைப்பின்பேரில் இந்திய பிரதமர் மோடி 17ஆம் தேதி வங்கதேச தலைநகர் டாக்கா செல்வதற்கான பயண திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.  ஆனால் வங்கதேசத்தில் கொரோனா தாக்கம் உள்ளதால் பிரதமர் மோடியின் பயணம் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .