Prime Minister Modi asked the former chief minister Panneerselvat to support Venkaiah Naidu

துணை குடியரசு தலைவருக்கு பாஜக வேட்பாளராக களமிறங்கும் வெங்கையா நாயுடுவிற்கு ஆதரவு தருமாறு பிரதமர் மோடி தொலைபேசியில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் கேட்டார்.

துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிகாலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.

இதனால் அடுத்த துணை ஜனாதிபதியின் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து எதிர்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரனாகிய கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக காங்கிரஸ் தலைமை நிறுத்தியுள்ளது.

இதைதொடர்ந்து திமுகவிடமும் அதிமுகவிடமும் கோபால கிருஷ்ண காந்தி ஆதரவு கோரியுள்ளார்.

மேலும், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை நாளை கோபால கிருஷ்ண காந்தி தாக்கல் செய்ய உள்ளார்.

இதையடுத்து பாஜகவின் ஆட்சிமன்ற குழு கூட்டன் இன்று நடைபெற்றது. இதில் பாஜக துணை குடியரசு தலைவர் வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், துணை குடியரசு தலைவருக்கு பாஜக வேட்பாளராக களமிறங்கும் வெங்கையா நாயுடுவிற்கு ஆதரவு தருமாறு பிரதமர் மோடி தொலைபேசியில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் கேட்டார்.

அதற்கு வெங்கையா நாயுடுவிற்கு ஆதரவு தருவதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார்.