துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இனி தமிழகத்தின் அனைத்து முன்னேற்றத்திற்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என மோடி தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் எடப்பாடியும் அணியும் பன்னீர் அணியும் இன்று தலைமை கழகத்தில் இணைந்தன. மேலும் சசிகலாவை நீக்க பொதுக்குழு கூட்டப்படும் என வைத்தியலிங்கம் அறிவிப்பு வெளியிட்டார். 

இதைதொடர்ந்து துணை பொதுச்செயலாளராக பன்னீர்செல்வம் பொறுப்பெற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

பின்னர் தலைமை செயலகத்தில் பன்னீர் செல்வம் பதவியேற்று கொண்டார். 
இந்நிலையில், பிரதமர் மோடி துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இனி தமிழகத்தின் அனைத்து முன்னேற்றத்திற்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் வரும் காலங்களில் தமிழகம் முழுவதும் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் அமைச்சராக பொறுப்பேற்ற மாஃபா பாண்டியராஜனுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.