Asianet News TamilAsianet News Tamil

கவர்னர் மீது பிரதமர் கோபம்: கவர்னரின் செயலரையே காவு வாங்கிடுமா நிம்மிலீக்ஸ் விவகாரம்?

Prime Minister anger over governor Nimmila issue of the governor secretary
Prime Minister anger over governor Nimmila issue of the governor secretary
Author
First Published Apr 26, 2018, 4:58 PM IST


நிம்மி லீக்ஸ் - என்று மீடியா வட்டாரங்களில் பரபரப்பாகி இருக்கும் பேராசிரியை நிர்மலாதேவியின் விவகாரம் கவர்னரின் செகரெட்டரியே காவு வாங்கிடுமோ?! என்று ராஜ்பவன் வட்டாரத்தில் பதைபதைக்கப்படுவதுதான் லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட்.அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் ஆடியோ பேச்சு வெளியானதும் கவர்னரின் பெயரும் அதில் அடிபட்டது. உடனே துரிதகதியில் செயல்பட்ட ராஜ்பவன், மீடியாக்களை அழைத்து பிரஸ்மீட் நடத்தியது.

Prime Minister anger over governor Nimmila issue of the governor secretary

இந்நிலையில், கவர்னர் பிரஸ்மீட் நடத்திய செயல் டெல்லி அதிகார மையத்தை அப்செட்டுக்கு உள்ளாக்கியுள்ளது என்று தகவல். காரணம்? ஜனாதிபதி மாளிகையை கலந்தாலோசிக்காமல், தமிழக கவர்னர் எப்படி மீடியாக்களை சந்திக்கலாம்!? என்று சிக்கல் வெடித்திருக்கிறதாம். இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்தே தீருவது என்று முடிவெடுத்திருக்கும் டெல்லி அதிகார மையம் அதற்காக, கவர்னர் பன்வாரிலாலின் செயலராக இருக்கும் ராஜகோபாலை கார்னர் செய்ய துவங்கியுள்ளது. ராஜகோபாலுக்கு தலைநகரிலிருந்து ஏகப்பட்ட கேள்விக் கணைகளாம்.

கவர்னரின் செயலராக இருக்கும் ராஜகோபால் நன்கு யோசித்து நடந்திருக்க வேண்டும், கவர்னர் பிரஸ்மீட் நடத்தும் முன் அதை டெல்லியின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டும்! என்று கறார் குரலில் கூறுகிறார்களாம். இதன் வெளிப்பாடாக கவர்னரின் செயலரான ராஜகோபால் நீக்கப்பட்டு, சோமநாதன் என்பவரை அந்த இடத்தில் அமர வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

Prime Minister anger over governor Nimmila issue of the governor secretary

ஆக நிர்மலாதேவியின் கைங்கர்யத்தால் தமிழக கவர்னரின் செயலரே காவு வாங்கப்படலாம் எனுமளவுக்கு நிலைமை வீரியமாகி இருக்கிறது.
ஆனால் ராஜ்பவனின் உள்வட்டாரங்களில் தொடர்புடைய சிலரோ, டெல்லியின் கோபம் ராஜகோபால் மீது இல்லை. கவர்னரின் மீதுதான். அந்த பிரஸ்மீட்டில் ஒரு பெண் நிருபரை தன் பேத்தி போல் நினைத்து பாசமாக தட்டிவிட்டார் அவர். ஆனால் தமிழகத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது. எதிர்கட்சிகளின் விமர்சனம், சம்பந்தப்பட்ட பெண்ணின் கண்டன ட்விட்டர் இவற்றால் கவர்னர் மன்னிப்பு கேட்குமளவுக்கு நிலை போனது.

Prime Minister anger over governor Nimmila issue of the governor secretary

மத்திய அரசின் பிரதிநிதியாக தமிழகத்தில் பார்க்கப்படும் பன்வாரிலால் சந்தித்த இந்த சூழ்நிலைகள் பிரதமர் அலுவலகத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டதாகவே டெல்லி மையம் கருதுகிறது. தங்களின் ஆத்திரத்தை வெளிக்காட்டவே கவர்னரின் மீது கைவைக்காமல் அவரது செயலரை தூக்க முடிவெடுத்துள்ளார்கள். ராஜகோபால் மாற்றப்படலாம் என்பது திரைமறைவு தகவல்தான். அது உண்மையில் நடந்தால், கவர்னர் பன்வாரிலால் மீது பிரதமர் மோடிக்கு இருக்கும் கோபம் வெட்டவெளிசமாகிவிடும்! என்கிறார்கள்.

பதவியேற்ற புதிதில் பெரும் பந்தா காட்டிய பன்வாரிலால் பலூன் இப்படி காற்றிறங்கும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios