நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.  இதையடுத்து பாஜக  எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இக்கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

இதன்மூலம் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். நாடாளுமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட மோடி, அத்வானியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். 

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்ததும், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார். எம்பிக்களின் ஆதரவு கடிதத்தையும் வழங்கினார். அதனை ஏற்று மோடியை ஆட்சியமைக்க வரும்படி ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 

இதைத் தொடர்ந்து மோடி வரும் 30 ஆம் தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.