அரசியல் மாற்றம் வந்தால் தான் ஆட்சி மாற்றம் வரும் எனப் பேசியதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்காக ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி'' என அவர் தெரிவித்துள்ளார்.  இதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவதை உறுதி செய்திருக்கிறார். ஆக மொத்தத்தில் அவர் அரசியல் எண்ட்ரி அதிரடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

இதற்கு கருத்து தெரிவித்துள்ள சிலர், ‘’தலைவா, நீங்கள் இந்த நாட்டிற்காகவும், மக்கள் நலனுக்காகவும் எடுத்திருக்கும் இந்த முடிவு, காலத்திற்கும் இந்த உலகம் பேசும். நீங்கள் எங்கள் #தலைவர் என்பதற்காக கர்வம் கொள்கிறோம். மக்கள் உங்களைதான் முதல்வரால நினைக்கிறாங்க இவங்களுக்காவாது முடிவை மாத்திக்கோங்க. சப்போர்ட் பண்றேன் உங்களுக்கு. எழுச்சி ஏற்படும், உங்கள் தலைமையில் ஆட்சியும் உருவாகும்.... உங்களுக்கு என்றும் துணை நிற்போம் தலைவா..’’ என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.