* நரேந்திர மோடி அரசாங்கத்தின் மீது தொடர்ந்து அரசியல் ரீதியாக கேள்விகளை எழுப்பி வருவதால், என் தந்தை மீது பல பொய் வழக்குகளை போட்டு வருகின்றனர்: கார்த்தி சிதம்பரம். (செம்ம காமெடிங்க வளர்ந்த தம்பி. மோடி எதிர்ப்பு விஷயத்துல உங்க அப்பா மாணவனா இருக்கிற ஸ்கூலோட ஹெட்மாஸ்டரே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான். வெச்சு டார் டாரா கிழிக்கிறாரு. ஆனா அவரு மேலே இப்படியா பொய் கேஸு போடுறாய்ங்க? பக்கோடா சாப்பிட்டா பல்லை குத்தத்தான் செய்யணும் பாஸு.)

* துணை முதல்வரும், அமைச்சர் ஜெயக்குமாரும் என் வீட்டுக்கு வந்து ஆதரவு கேட்டனர். அதேமாதிரி, பல அமைச்சர்களும் பேசினர். இதன் அடிப்படையில் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் முடிவெடுத்தோம்: சரத்குமார். (இருக்கலாம் சரத்து,. அபரிமிதமான வாக்கு வங்கியை நீங்க வெச்சிருக்கிறப்ப இப்படி முதல்வர் என்ன, பிரதமரே ஓடி தேடி வரத்தான் செய்வாங்க. அதுக்காக நாற்பது தொகுதியிலும் நீங்க போட்டி போடாமல் இப்படி தவிர்க்கிறது ஜனநாயகத்துக்கு ஏற்றதா சரத்து! உங்களுக்காக ஓட்டுப் போட துடிக்கிற கோடிக்கணக்கான மக்களோட உணர்வுகளை யோசிங்க, சிங்க, ங்க, க.)

* சின்னம்  ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக புகார் வருகிறது. அதற்கு, தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும்: வைகோ. (என்ன மயில்சாமி ரூட்டு மாறி பேசுற மாதிரி தெரியுதே!  சின்னம் விஷயத்துல சின்னாபின்ன பட்ட தினகரனுக்கு ஆதரவா சீன் போடுற மாதிரி இருக்குது. பொதுவா ஒரு எலெக்‌ஷன் முடிஞ்ச பிறகுதானே அடுத்த கட்சியை தேடுவீங்க, இப்ப என்ன தேர்தலுக்கு முன்னேயேவா! அடுத்து உங்களை தினகரனோடு சந்திக்கலாமா?)

* மக்கள் சின்னத்தைப் பார்த்து ஓட்டுப்போடுவதில்லை. தலைவர்களைப் பார்த்துதான் ஓட்டு போடுகின்றனர். அண்ணா, எம்.ஜி.ஆர். வரிசையில் வரும் தேர்தலின் மூலம் தினகரனும் அந்த சாதனையை செய்வார்: மாஜி பழனியப்பன். (இஸ் இட் மிஸ்டர் பழனி!? அப்புறம் இன்னாத்துக்கு மேன் ‘ரெட்ட இலையை எங்களுக்கு கொடுங்கோ, கொடுங்கோவ்!’ன்னு டெல்லி கமிஷன் பக்கம் வந்து நின்னு கூவுறாரு ஒங்க தலைவரு? சின்னம் கிடச்சா ஒண்ணு பேசுறீங்கோ, இல்லேன்னா ஒண்ணு பேசுறீங்கோ, இன்னா மேன் பழ்க்கம் இதெல்லாம். யூ நாட்டீஸ்!)

* ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சாதாரணமானவர்களை, சக்தி மிக்கோர்களாக ஆக்கும் குணம் படைத்தவர்கள். சாதாரணமான நபர்களுக்கு சீட் கொடுத்து, ஜெயிக்க வைத்து பெரும் அதிகாரத்தை கொடுத்தவர்கள்: பிரேமலதா. (வாய்புளிச்சுதோ, மேங்கோ புளிச்சுதோன்னு பேசப்டாது பிரேமாக்கா)