தலைவர்களுக்கு ஒண்ணுன்னா தொண்டர்கள் கொதித்து எழ வேண்டும் என்று நினைப்பது அனைத்து தலைவர்களுக்கும் பொதுவானதுதான்.

ஆனால் தற்போது தமிழகத்தில் தலைவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அதை தொண்டர்களிடம் இருந்து அப்படியே கமுக்கமாக மறைக்க மட்டுமே பார்க்கின்றனர் அரசியல்வாதிகள்.

ஜெயலலிதா மருத்துவமனைக்கு சென்ற போது மர்மம் நீடித்தது. அதை தொடர்ந்து கருணாநிதி மருத்துவமனைக்கு சென்ற போதும் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

இந்த வரிசையில் தற்போது கேப்டன் விஜயகாந்த் உடல் நிலை மொஷமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி தே.மு.தி.க தொண்டர்களை கவலையில் ஆழ்த்தி வருகிறது.

ஆர்.கே.நகர் பிரச்சாரத்திற்கு பிறகு விஜயகாந்திற்கும் தொண்டர்களுக்கும் இடையே மிகப்பெரிய கேப் விழுந்துவிட்டது.

இந்த கவலையில் இருந்து அவர்களுக்கு சற்று நிவாரணம் அளிக்கலாம் என்று பிரேமலதா பொதுக்கூட்டம் ஒன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த பொதுக்கூட்டத்திற்கு விஜயகாந்த் வருவார், பேசுவார், தொண்டர்களை உற்சாகபடுத்துவார் என்று இரண்டாம் தர கட்சி நிர்வாகிகள் எதிர்பார்ப்பில் ஆழ்ந்து வரும் நிலையில், இது எல்லாம் நடக்குமா என்ற பதற்றத்தில் முதல் தர நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள்.

பிரேமலதா ஏற்பாடு செய்த பொதுக்கூட்டம் இன்று 5 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அண்ணி பிரேமலதா 7.30 மணிக்கு தான் வந்தார்கள்.

விஜயகாந்திற்காக எதிர்பார்த்த தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தொண்டர்கள் வேட்டியை வரிந்து கட்டி கொண்டு வீட்டிற்கு கிளம்ப தொடங்கினர்.

கேப்டன் கண்டிப்பாக வருவார், பேசுவார் என்று கூறி கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை அடக்கி உட்கார வைக்கின்றனர்.

தற்போது விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் அவரால் தொடர்ந்து 4 மணி நேரம் உட்கார முடியாது என்றும், நீண்ட நேரம் பேசமுடியாது என்றும் தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

எனவே கேப்டன் வருவது சந்தேகமே. ஒருவேளை அவர் வந்தாலும் ஒரு மணி நேரம் உட்கார வைத்துவிட்டு நாசுக்காக மீண்டும் வீட்டுக்கு கிளப்பி விட வேண்டும் என்பதே பிரேமலதாவின் திட்டமாக தெரிகிறது.

என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...