வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பிரேமலதா சுதீஷ் நிர்வகிக்கும்  தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பெரும் அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து வந்தவுடன் கூட்டணி குறித்து அறிவிப்பார் என சொல்லப்பட்டது. இதற்கு முன்னதாக  அதிமுகவுடன் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதிமுகவுடன் கூட்டணிக்கு தயாராக இருந்த நிலையில் முதலில் பாமகவை அழைத்து அவர்களுக்கு 7+1 தொகுதிகளை ஒதுக்கினர் ஒப்பந்தம் போட்டனர்.  இதையடுத்து பிஜேபிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது. இந்த சமயத்தில் தேமுதிகவோ தங்களுக்கு பாமகவை விட அதிக தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு கோரி வந்ததாக தெரிகிறது. இதற்கு அதிமுக உடன்படாததால் அதிமுக- தேமுதிக உடன்பாடு இழுபறியில் நீடித்தது.

இதனால் கடுப்பான பிரேமலதா தேமுதிக நிர்வாகிகள் சிலரை திமுகவுடன் டீல்  பேச அனுப்பிவிட்டு தனது தம்பி சுதீஷை பியூஸ் கோயிலுடன் பேரத்திற்கு அனுப்பியதாக சொல்லப்பட்டது. இந்த தகவலை ஸ்மல் பண்ண திமுக பொருளாளர் துரைமுருகன், எங்ககிட்ட சீட் இல்ல, நீங்க கிளம்பலாம் என டாட்டா காட்டி அனுப்பியது மட்டுமல்லாமல், இவர்கள் வருவதற்கு முன்பு மீடியாவை வெளியில் நிற்க வைத்துவிட்டு தேமுதிகவினரை வெளியில் அனுப்பினார். வசமாக மீடியாவின் கேமராவில் சிக்கிய அவர்கள் சொந்த விஷயம் பேச வந்ததாக மழுப்பினர். ஆனால் துரைமுருகனோ ஒரே நேரத்தில் மாறி மாறி டீல் பேசறாங்க, வந்தவங்க யாருன்னே தெரியாது அப்புறம், எப்படி என்னோடு சொந்த விஷயம் பேசப்போறாங்கன்னு கலாய்த்து தள்ளினார். 

இதனால் பேரம் படியாமலும், ரெண்டு வீட்டு நாயி சொத்துக்கு செத்த கதையா ஏற்கனவே தருவதாக சொன்ன 5 ல் இருந்து 4 க்கு வந்த அதிமுக, இடைத்தேர்தலுக்கும் ஆதரவை கேட்டு நேற்று ஸ்டார் ஹோட்டலுக்கு வரவழைத்து எழுதி வாங்கிக்கொண்டது அதிமுக.  

கூட்டணி ஒப்பந்தம் முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரேமலதா, ’அதிமுக - தேமுதிக கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணி. சட்டப்பேரவை இடைத்தேர்தல்,  உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்.   அதிமுக எம்பிக்கள் குறித்து நான் பேசிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது, நானும் அதற்கு கொடுத்துவிட்டேன். தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எண்களில் ஒன்றும் கிடையாது.  எல்லாம் எண்ணங்களில் தான் இருக்கிறது.  இந்த கூட்டணி அமையாமல் இருக்க சிலர் சதி வேலைகளில் ஈடுபட்டனர். பரவாயில்லை, நாரதர் கலகம் நல்லதில் முடிந்தது. கெடுவார்கள்தான் கேடு நினைப்பார்கள் என டீல் பேச வந்தவர்களை இப்படி மீடியா முன் போட்டுக்கொடுத்து, வெறும் நாலு சீட்டுக்கு கையேந்த வைத்துவிட்டார் என துரைமுருகன் மீது காட்டமாக இருப்பது தெரிந்துள்ளது.