Asianet News TamilAsianet News Tamil

அமெரிக்காவிலிருந்து ரஜினியை இயக்கும் பவர்ஃ புல் கேங்! யார் யார்? எத்தனை பேர்!

Powerful IT team access rajini team from America America
Powerful IT team access rajini team from America America
Author
First Published Jan 5, 2018, 11:56 AM IST


சுமார் முப்பது ஆண்டுகளுக்குப்பின் ஆன்மீக அரசியல் என்ற பெயரில் அரசியல் பிரவேசத்தை தொடங்கியுள்ளார். அவரின் கட்சியில் சேர ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரசிகர்களை ஒன்றிணைக்கும் பொருட்டும், அவரின் கட்சியில் இணைக்கும் விதமாக https://rajinimandram.org/ என்ற வெப்சைட்... மற்றும் இணையதள செயலி (Mobile Apps) தகவல் பரிமாற்றத்திற்கான இந்த வசதியை முன்னதாகவே தொடங்கியுள்ளனர்.

சரி ரஜினிக்கு இந்த வேலைகளெல்லாம் செய்தவர்கள் யார்? இதன் பின்னணியில் இருப்பவர் என்னென்ன செய்கிறார்கள்? இவர்களின் அடுத்தகட்ட வேலைகள் என்னென்ன?

 ரஜினியின் மூத்த மகள் தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவுடன் படித்த சஞ்சய்தான் ரஜினியின் தனிப்பட்ட உதவியாளர். ரஜினி அடுத்தடுத்த ப்ரோகிராம் என்னவென்பதை முன்கூட்டியே டீமில் இருப்பவர்களுக்கு தகவல்களை தெரியபடுத்துவது.

இணையத்தளம் மற்றும் மொபைல் ஆப் போன்றவற்றை  தகவல் தொழில்நுட்பப் பிரிவை சாமுவேல் என்பவர் கவனிக்கிறார்.

Powerful IT team access rajini team from America America

ரசிகர் மன்றத்தினருடனான நிர்வாகத்தை சுதாகர் பார்க்கிறார். ரஜினி பெயரில் தமிழகம் முழுக்கப் பதிவு செய்யப்பட்ட 22 ஆயிரம் மன்றங்கள், பதிவு செய்யப்படாத 30 ஆயிரம் மன்றங்கள் செயல்படுகின்றன. 1998-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய மன்றங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மன்ற நிர்வாகத்தை சுதாகர் கவனிக்கிறார். சிவ.ராமகிருஷ்ணன் உடன் இருக்கிறார். இவர்களுடன் ராமதாஸ், சூர்யா, ரவி... பார்த்து வருகிறார்கள்.  இவர்களைத்தவிர, ரஜினியின் கமாண்டென்ட்களாக (Bodyguard) ஆறு பேர் உள்ளனர்.

Powerful IT team access rajini team from America America

வெப்சைட் பிரிவு, மொபைல் ‘ஆப்’ பிரிவு, சமூக வலைதளப் பிரிவு, (Twitter, WhatsApp, Facebook)கன்டென்ட் கிரியேஷன்ஸ் பிரிவு, மீம்ஸ் கிரியேஷன்ஸ் பிரிவு, மார்கெட்டிங் டீம் என சுமார் முப்பதிற்கும் மேற்ப்பட்டவர்கள் வேலை பார்க்கிறார்கள். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் உள்ளவர்களின் மேற் பார்வையில் இருக்கிறார்கள்.

இதை தவிர, இணையத்தில் பதிவாகும் ரசிகர்களின் தகவல்களை பதிவு செய்ய டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் எட்டு பேர் வேலை செய்கிறார்கள்.

இவர்களைத் தவிர, ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா, நண்பர் ராஜ்பகதூர், மனைவி லதாவின் உறவினர்கள் ரவி ராஜேந்திரன் மற்றும் எஸ்.வி.ரமணன், ரஜினியுடன் படித்த விட்டல் பிரசாத், ராகவேந்திரா மண்டப நிர்வாகத்தைக் கவனிக்கும் முரளி பிரசாத் என ரஜினியின் நேரடி தொடர்பில் உள்ளார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios