Asianet News TamilAsianet News Tamil

சீனாவை ஒழிக்க அணி திரளும் வல்லரசு நாடுகள்.! இந்தியாவுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.!

கொரோனா வைரஸை உலகம் முழுவதும் பரப்பிய சீனாவிடம் பொருளாதார விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முடிவெடித்துள்ள நிலையில், சீனாவில் உள்ள தங்கள் நிறுவனங்களை வெளியேற உத்தரவிட்டிருக்கிறதாம் ஜப்பான்.

Power of nations to eradicate China. Jackpot to hit India.
Author
Japan, First Published Apr 12, 2020, 2:06 PM IST

T.Balamurukan

கொரோனா வைரஸை உலகம் முழுவதும் பரப்பிய சீனாவிடம் பொருளாதார விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முடிவெடித்துள்ள நிலையில், சீனாவில் உள்ள தங்கள் நிறுவனங்களை வெளியேற உத்தரவிட்டிருக்கிறதாம் ஜப்பான்.

Power of nations to eradicate China. Jackpot to hit India.

கொரோனா பிரச்னையால் உலகப் பொருளாதாரம் சிக்கலில் மாட்டி இருக்கிறது. பல்வேறு நாடுகளில் பங்குசந்தைகள் கடும் சரிவை சந்தித்திருக்கின்றது. ஆனால் இந்த நேரத்தை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கிறது. சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள், உலகம் முழுவதும் உள்ள மற்ற பன்னாட்டு நிறுவனங்களின் பங்குகளை அதிகம் வாங்கி குவித்திருக்கும் தகவல் ஜப்பான்,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு தெரியவந்திருக்கிறது.,அந்த நாடுகள் எல்லாம் சீனா மீது பொருளாதார விலகலை கடைபிடிக்க முடிவு ச்ய்திருக்கிறதாம். இதனால் அந்த நிறுவனங்கள் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. பங்குகளை வாங்கி குவித்த சீனாவின் செயல்,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Power of nations to eradicate China. Jackpot to hit India.

இந்நிலையில், சீனா செய்த வேலைக்கு பதிலடி தர வேண்டும் என்று ஒரு சில நாடுகளிடையே கருத்து நிலவுகிறது.  சமூக விலகலை கடைப்பிடிப்பது போல் சீனாவிடம் பொருளாதார விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்நாடுகள் நினைக்கின்றன. இனிமேல் சீனாவை நம்பி இருக்கக் கூடாது என்று அந்த நாடுகள் முடிவு செய்திருக்கின்றது.அமெரிக்காவும், ஜப்பானும் இதற்கான வேலையை முன்னின்று செய்து வருகின்றது. சீனாவை விட்டு பெரிய நிறுவனங்கள் வெளியேறுவதற்கு ஜப்பான் உதவி செய்வதாக கூறப்படுகிறது. பெரிய நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுவதற்கு நிவாரண நிதி தருவதற்காகவும் அதற்காக் சுமார் 2.2 பில்லியன் டாலர்களை ஜப்பான்நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிய வந்திருக்கிறது. இது ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20 சதவிகிதம் ஆகும்.அமெரிக்கா,ஜப்பான் நாடுகள் உலகுக்கு  தெரிவிக்கும் செய்தி சீனாவை விட்டு வெளியேறுங்கள் என்பது மட்டுமே.பொறுத்திருந்து பார்ப்போம். கூடிய விரைவில் உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சீனாவை ஒதுக்கி வைக்கும் முடிவுக்கு வரலாம்.அப்படி வரும் போது உலக உற்பத்தி ,பொருளாதாரம் வளர்ச்சியெல்லாம் இந்தியாவிற்கு அடிக்கும் ஜாக்பாட்டாக இருக்கும்.

Power of nations to eradicate China. Jackpot to hit India.

சீனாவில் உற்பத்தி குறைந்தால் அதனால் பலனடையும் முக்கிய நாடு இந்தியா. ஏனென்றால் இந்தியாவில் உற்பத்திக்கான கட்டமைப்பு மற்றும் மனித சக்தி ஏராளமாக கிடைக்கிறது. இதனால் இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பெருகும். அடுத்து வியட்நாம், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும்.இந்த நாடுகள் எல்லாவற்றிலுமே குறைவான ஊதியத்திற்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பார்கள் என்பதால் உலக நாடுகளின் பார்வை அடுத்ததாக இந்த நாடுகளைத்தான் குறி வைக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios