தமிழ்நாட்டின் மையப் பகுதியி லுள்ள திருச்சி மீது அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வ ருமான எம்.ஜி.ஆருக்கு தீராத பற்றுண்டு. எனவேதான், உறையூர் பகுதியில் தனக்கென ஒரு பங்களாவை வாங்கியதுடன், திருச்சியை மாநிலத்தின் தலைநகராகவும் மாற்ற முயற்சி செய்தார்.

எம்ஜிஆரைப் போலவே, அக்கட்சியின் அடுத்த தலைமை யான ஜெயலலிதாவுக்கும் திருச்சி மிகவும் பிடித்தமான ஊராக விளங்கியது. மாவட்டச் செயலாளர் பதவியை பிடிக்க முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பரஞ்ஜோதி, பாலசுப்பிரமணியன் உட்பட நிறைய பேர் போட்டி போட்டு வருகின்றனர்.அப்படிப்பட்ட திருச்சி மாவட்டத்தை மூன்றாக பிரித்து அ.தி.மு.க.,வில் புதிய மாவட்ட செயலர்களை நியமிக்க இருக்கிறார்கள். இதில், ஒரு

கொரோனா பரபரப்பு எல்லாம் முடிந்ததும் மாவட்ட பிரிப்பு, செயலர்கள் நியமனம் எல்லாம் நடக்க இருக்கிறது. ஆனாலும், பரஞ்ஜோதிக்கு பதவி கொடுத்து விடக்கூடாது என எதிர் கோஷ்டியைச் சேர்ந்த ஏகப்பட்ட பேர், இப்போதே  தலைமைக்கு புகார் கடிதங்களை அனுப்பி வருகிறார்கள். 

ஏனென்றால் அவர், ஒரு பெண் டாக்டரை இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றியவர். அதனால், ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே, அமைச்சர் பதவி, கட்சிப் பதவியை இழந்தவர். அவருக்கு பதவி கொடுத்தால் கட்சி உருப்படாது என மொட்டைக்கடிதங்கள் பறக்கின்றன.