Asianet News TamilAsianet News Tamil

#Biharelection2020: பீகார் தேர்தல்... தபால் வாக்கில் சமபலத்தில் ஆர்.ஜே.டி.-காங்கிரஸ் - பாஜக - ஜேடியு கூட்டணி..

பீகாரில் நடைபெற்றுவரும் தபால் வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியும் சமபலத்தில் முன்னிலை வகித்துவருகின்றன.
 

Postal vote counting in Bihar
Author
Bihar, First Published Nov 10, 2020, 8:25 AM IST

பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கப்பட்டன. பீகாரில் உள்ள 55 மையங்களில் வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இத்தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதாதளத்துக்கும் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணிக்கு இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது. பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இதில் 122 தொகுதிகளை வெல்லும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்.Postal vote counting in Bihar
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இதில் ஆர்.ஜேடி. - காங்கிரஸ்- இடதுசாரிகள் அடங்கிய மெகா கூட்டணி  37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ளன. ஆளும் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி  37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ளது. தபால் எண்ணிக்கை முடிந்த பிறகே தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. 

Follow Us:
Download App:
  • android
  • ios