தென்காசியில் டாஸ்மாக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் ஏன் இல்லை என சண்டை போட்ட உடன்பிறப்புகளின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தென்காசியில் டாஸ்மாக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் ஏன் இல்லை என சண்டை போட்ட உடன்பிறப்புகளின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் ரவிசங்கர், செங்கோட்டை நகர் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடைக்கு சென்றார். அங்கு ஜெயலலைதாவின் புகைப்படத்தை அகற்றி விட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை வைக்க வேண்டும் என்க் கூறி டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அடுத்து தனக்கு மதுபான கடைகளில் இருந்து மாதம்தோறும் கமிஷன் தரவேண்டும் என்றும் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

அத்தோடு கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியான புளியரையில் பாஜகவின் பிரச்சார வாகனத்தை தடுத்து சண்டையிட்டதாகவும் புகார் கூறப்படுகிறது. அடுத்து குற்றாலம் காவல் நிலையத்தில் ஒருவரை கடத்தி மிரட்டியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், திமுக நிர்வாகி டாஸ்மாக் கடையில் முதல்வர் படத்தை மாட்டச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.