Asianet News TamilAsianet News Tamil

ஜனவரியில் வரும் பொங்கலுக்கு இப்போதே பரிசா... எடப்பாடியை ஏடாகூடமாக விமர்சித்த தினகரன்..!

கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் அட்டை உள்ள குடும்பத்தாருக்கு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி மற்றும் 1000 ரூபாய் என்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

Pongal Gift scheme...ttvdhinakaran Review
Author
Tamil Nadu, First Published Nov 29, 2019, 4:03 PM IST

ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகைக்கு இப்போதே பரிசு வழங்குவது கேலிக்கூத்தாக உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளர். 

கடந்த 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி என்ற புதிய மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். பின்னர், விழா மேடையில் பேசிய முதல்வர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் அட்டை உள்ள குடும்பத்தாருக்கு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி மற்றும் 1000 ரூபாய் என்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

Pongal Gift scheme...ttvdhinakaran Review

இதனையடுத்து, இன்று பொங்கல் பரிசு திட்டத்தை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்நிலையில், பொங்கலுக்கு இன்னும் ஒரு மாதங்கள் உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் அவசர அவசரமாக தொடங்கி உள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி இருந்தனர். 

Pongal Gift scheme...ttvdhinakaran Review

இந்நிலையில் அமமுக துணைப்பொதுச்செயலார் டிடிவி.தினகரன் ஜனவரியில் வரும் பொங்கலுக்கு இப்பொழுதே பரிசு வழங்குவது கேலிக்கூத்தாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios