தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கான ஆளுனராக  நியமிக்கப்பட்டுள்ளது சட்டவிரோதம் என புதுவை முதலமைச்சர் நாராணசாமி அதிரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வருகிறார் தமிழிசை சௌந்திரராஜன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிரித்து போட்டியிட்டார் தமிழிசை , அதில் அவர் தோல்வியடைந்தார். வெற்றி பெற்றிருந்தால் மத்திய அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட வாய்ப்பு அதிகமாக இருந்தது.  இந்நிலையில் அவரின் தலைவர் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அவர் தெலங்கானா மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஆளுனர் பதிவி கிடைத்தவுடன் தமிழக பாஜக தலைவர் பதவியை அவர் ராஜினமா செய்துள்ளார் தமிழிசை.

தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண் தெலங்கானாவிற்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு அரசியில் கட்சித் தலைவர்கள் அவருக்கு வழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புகழ்பெற்ற  ஸ்ரீமணக்குள விநாயகரை தரிசிக்க வந்தார், அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கான ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளது சட்டவிரோதம் என்றார்.  அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை ஆளுனர் மற்றும் துணைநிலை ஆளுனர்களாக நியமிப்பது சட்ட விரோதம் என சர்காரியா கமிஷன் தெளிவாக தெரிவித்துள்ளது என்றார்.

காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அரசியில் கட்சியில் இருந்து யாரையும் நியமிக்க வில்லை என்று நான் கூறவில்லை,  ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்களை அதிக அளவில் ஆளானராக நியமித்து வருகின்றனர் என்று அவர் குற்றம்சாட்டினார். இருந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை ஆளுநாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு எனது வாழ்த்துக்கள் எனவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.