சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்த பின் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். 

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்த பின் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். 

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஓரணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதியில் போட்டியிடுகிறது. ஆனால், வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்து வந்தனர். 

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்த பின் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், தட்டாஞ்சாவடி, ஏனாம் தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி போட்டியிடுகிறார். 

வேட்பாளர் பட்டியல் விவரம்;-

* தட்டாஞ்சாவடி - ரங்கசாமி 

* திருபுவனை - கோபிகா

* ராஜ்பவன் - லட்சுமி நாராயணன்

* பாகூர் - தனவேலு

* நெட்டப்பாக்கம் (தனி) - ராஜவேலு

* மங்கலம் - ஜெயகுமார்

* வளவனூர் - சுகுமாரன்

* உழவர்கரை - பன்னீர்செல்வம்

* கதிர்காமம் - ரமேஷ்

* இந்திரா நகர் - ஆறுமுகம் AKD

* அரியாங்குப்பம் - தட்சாணமூர்த்தி

* இம்பலம் (தனி) - லட்சுமிகந்தன்

* நெடுங்காடு (தனி) - சந்திர பிரியங்கா

* காரைக்கால் (வடக்கு) - திருமுருகன்

* மாகி - அப்துல்ராகுமான்

* ஏனாம் - ரங்கசாமி