Asianet News TamilAsianet News Tamil

அடுத்தவங்க குழந்தைக்கு தனது இன்ஷியலா போடுற வேலையை செய்யாதீங்க.. திமுகவுக்கு சவுக்கடி கொடுத்த பொன்னார்..!

திமுகவினர் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்று தகுதி அற்றவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அல்வா கொடுக்கிறது. நீட் தேர்வை மத்திய அரசு கொண்டுவரவில்லை. உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் படி தான் நீட் கொண்டுவரப்பட்டது.

pon.radhakrishnan slams dmk government
Author
Tirunelveli, First Published Aug 2, 2021, 12:52 PM IST

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கொடான கோடி மக்களுக்கு திமுக அல்லா கொடுத்துவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  விமர்சித்துள்ளார். 

நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்;- கொரோனா தொற்றில் இருந்து நம்மையும், பிறரையும் காக்க தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை செய்து கொள்வது அவசியமானது. மத்திய அரசு கொரோனா தடுப்புக்காக விதிக்கும் அனைத்து விதிகளையும்  மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். 

pon.radhakrishnan slams dmk government

நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வரவேற்பும் எதிர்ப்பும் காட்டி வருகிற நிலையில் மத்திய ஒதுக்கீட்டில் வரும் இடங்களில் இதுவரை வழங்காமல் இருந்த பிற்படுத்த மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீட்டை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம் நம் நாட்டின் சரித்திரத்தில் மிக முக்கிய காலக்கட்டத்தை பிரதமர் எட்டியுள்ளார். 

pon.radhakrishnan slams dmk government

மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடும் நடைமுறைப்படுத்தபடும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு விஷயமும் பல்லாயிரக்கணக்கான  மாணவர்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும். நீட் தேர்வு பின்னணியை பார்த்தால் ஆரம்பத்தில் அது கொண்டுவரப்பட்டபோது மத்தியில் காங்கிரஸ் மாநிலத்தில் திமுக ஆட்சி இருந்த போதுதான்.  கலைஞரின் ஒரு சுட்டு விரல் அசைவுக்கு மத்திய அரசு தலை வணங்கும் என்று அன்று சோனியா சொன்னார் அவ்வளவு சக்தி படைத்த நீங்கள், ஏன் இந்த ஓபிசி மாணவர்கள் பற்றி கவலைப்படாமல் இருந்தீர்கள்? இன்று நீட் பற்றி பேச திமுகவுக்கும் காங்கிரசுக்கும் எந்தவித அருகதையும் இல்லை.

pon.radhakrishnan slams dmk government

தமிழகத்தில் 2019ல் நீட் தேர்வு எழுதி தகுதி பெற்றவர்கள் 48.57% பேர். 2020ல் 57.44 % மாணவர்கள் தகுதி பெற்றார்கள். ஒரு ஆண்டில் 10% அதிகமாகியுள்ளது. கிராம புற மாணவர்கள் நலனுக்காக அதிமுக அரசு 7.5% இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது. இந்த விஷயத்தில் அடுத்த குழந்தைகளுக்கு தனது இன்சியல் போடும் வேலையை செய்ய கூடாது. திமுகவினர் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்று தகுதி அற்றவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அல்வா கொடுக்கிறது. நீட் தேர்வை மத்திய அரசு கொண்டுவரவில்லை. உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் படி தான் நீட் கொண்டுவரப்பட்டது. சட்டப்பேரவையில் நாடகம் ஆடுவதற்காக திமுக பயன்படுத்தி வருகிறது என்று கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios