pon radhakrishnan pressmeet about TN government

எந்த மாநில அரசையும் கலைக்க பா.ஜ.க. தயாராக இல்லை எனவும், தமிழக அரசு எந்த விதத்திலும் முன்னேறி விடக்கூடாது என்று மிகப்பெரிய சதி நடக்கிறது எனவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகத்தில் சசிகலாவின் பினாமி ஆட்சியே நடைபெற்று வருகிறது என்ற கூற்று மறைந்து தற்போது பா.ஜ.வின் பினாமி ஆட்சி நடைபெறுவதாக குற்றசாட்டு எழுந்து வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி தலைமையிலான அரசு எந்த காரணத்தை கொண்டும் மத்திய அரசை விமர்சிக்க கூடாது என அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார்.

அதைதொடர்ந்து சசிகலா தரப்பில் இருந்து பிரிந்து போன ஒ.பி.எஸ் தரப்பும் பா.ஜ.க பக்கம் சாய்வது போன்ற தோரனையை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் இன்று பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார் பா.ஜ.கவுடன் கூட்டணி குறித்து பேசப்படும் என தெரிவித்துள்ளார்.

திமுக குற்றசாட்டை மறுத்து வந்த அதிமுக தற்போது பா.ஜ.வின் செயலுக்கு அசைபோட ஆரம்பித்திருக்கிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எந்த மாநில அரசையும் கலைக்க பா.ஜ.க. தயாராக இல்லை எனவும், தமிழக அரசு எந்த விதத்திலும் முன்னேறி விடக்கூடாது என்று மிகப்பெரிய சதி நடக்கிறது எனவும் தெரிவித்தார்.

மேலும், கல்வி முன்னேற்றத்திற்காக தமிழக அரசு எடுக்கும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.