நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணம் குறித்து, தமிழக அரசு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் இல்லையென்றால், அந்த மரணத்துக்கு ஆளும் அரசும் பொறுப்பேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக சார்பில் திருச்சியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோர் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

நீட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான நாற்காலிகள் போடப்பட்டிருந்தும் தொடக்கத்தில் இருந்த கூட்டம்  சேரவில்லை.

இந்நிலையில் பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  அனிதாவின் மரணத்துக்கு முழுக்க, முழுக்க திமுகதான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணம் குறித்து, தமிழக அரசு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் இல்லையென்றால், அந்த மரணத்துக்கு ஆளும் அரசும் சேர்ந்து பொறுப்பேற்க வேண்டும் என்றும் பொன்னார் தெரிவித்தார்.