கடந்த பாஜக ஆட்சியில் தமிழகத்தில் பாஜக சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதே தொகுதியில் பாஜக சார்பில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரிடம் பொன்.ராதிகிருஷ்ணன் தோல்வி அடைந்ததார்.

மத்தியில் பாஜக அசுர பலத்துடன் வெற்றி பெற்றிலும், தமிழகத்தில் இருந்து ஒரு பாஜக உறுப்பினர் கூட தேர்தந்தெடுக்கப்படாத நிலையில் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு பறி போனது.

இந்நிலையில்தான் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டு , மத்திய அமைச்சராக்கவும் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லி விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.