Asianet News TamilAsianet News Tamil

பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு... 196 பேருக்கும் வாழ்நாள் தடை..?

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளா்களை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக 2017-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆா்பி) நடத்திய இந்த தேர்வை 1.33 லட்சம் பேர் எழுதினர். ஆனால், முறைகேடு காரணமாக 2018-ல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு ரத்தானது.

Polytechnic professor exam abuse...Lifetime ban for 196 people
Author
Tamil Nadu, First Published Feb 1, 2020, 9:09 AM IST

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 196 பேருக்கும் வாழ்நாள் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளா்களை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக 2017-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆா்பி) நடத்திய இந்த தேர்வை 1.33 லட்சம் பேர் எழுதினர். ஆனால், முறைகேடு காரணமாக 2018-ல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு ரத்தானது. 

Polytechnic professor exam abuse...Lifetime ban for 196 people

அந்த முறைகேட்டில் 196 பேர் பணம் கொடுத்து தேர்வாக முயற்சித்ததாக தெரியவந்தது. இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான மறு அறிவிப்பை டிஆா்பி கடந்த நவம்கர் 27-ம் தேதி மீண்டும் வெளியிட்டது. 1,060 காலிப்பணியிடங்களுக்கு வரும் பிப்ரவரி 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஆா்பி அறிவித்துள்ளது.

Polytechnic professor exam abuse...Lifetime ban for 196 people 

இந்த பணியிடங்களுக்கு ஏற்கெனவே முறைகேட்டில் ஈடுபட்டவர்களும் விண்ணப்பித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ஆசிரியா் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ஏற்கெனவே முறைகேடு செய்தவர்களின் முழு விவரங்கள் தோ்வு வாரியத்திடம் உள்ளன. தற்போதைய விண்ணப்ப பதிவு நடைமுறைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. எனவே, முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் விண்ணப்பித்தாலும் நீக்கப்படுவார்கள். ஒருபோதும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்நிலையில், 196 பேரும் தேர்வு எழுத நாள் தடை விதிக்க அரசுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. விரைவில் அனுமதி பெற்று அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios